ஜனாதிபதி மஹிந்த மீது அவுஸ்திரேலிய நீதிமன்றில் வழக்கு
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலியரான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுநலவாய உச்சிமாநாட்டுக்காக இன்று அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
வீடுகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அநாதை இல்லங்கள் மற்றும் சமூக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கான நீதியை தான் எதிர்பார்ப்பதாக ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்................. read more
No comments:
Post a Comment