Translate

Tuesday, 11 October 2011

லண்டனில் ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ விருதைப்பெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம்!


செல்வி.சாகித்தியாவின் நாட்டிய நுட்பங்கங்களை அவதானித்த பிரதம விருந்தினரான ‘ஆதீத நர்த்தகி’ ஸ்ரீமதி.கிருபாநிதி ரட்னேஸ்வரன் அவர்கள்  ‘சம்பூரண நர்த்தகி சாகித்தியா’ என்ற விருதினை செல்வி சாகித்தியா சுரேசிற்கு வழங்கிக் கௌரவித்திருந்தார்.
இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’ இலங்கையில் நடன உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ‘நடன நாடகச் செல்வி’ ஸ்ரீமதி நளாயினி ராஜதுரையை தனது முதல் குருவாகக் கொண்ட சாகித்தியா சுரேஸ் ‘நாட்டியக்கலைமணி’  ஸ்ரீமதி மாலதி ஜெயநாயகத்திடம் தனது நாட்டியக் கலையை தொடர்ந்து முறையாக முழுமையாகப் பரதத்தைப்பயின்று அண்மையில்  லண்டன் The Orchard Theater  இல் அரங்கேற்றம் கண்டுகொண்டார்.
பரதக்கலை மட்டுமன்றி அக்கலையோடு பிணைந்திருக்கும் சங்கீதக் கலையையும் நான்கு சகாப்தங்களாக பரதநாட்டியஇ குச்சுப்பிடி அரங்கேற்றங்களுக்குப் பாடிவரும் ‘நாட்டியக் கோகிலவாணி’ ஸ்ரீமதி அம்பிகா தாமோதரத்திடம் கற்றுத் தேறிய பெருமைக்குரியவராவார் இந்த இளம் சாகித்தியா. Continue reading

No comments:

Post a Comment