Translate

Monday, 21 November 2011

தமிழ் இளையோர் அமைப்பினால் பிரித்தானியாவில் மாவீரர் வார தொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டன

தமிழ் இளையோர் அமைப்பினால் பிரித்தானியாவில் மாவீரர் வார தொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டன

தமிழ் இளையோர் அமைப்பினால் 20/11/2011 பிரித்தானியாவின் தமிழர்கள் வாழும் பகுதிகள் எங்கும் மாவீரர் வாரம் நினைவுகோரல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. தமிழர் வர்த்தக சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என பிரத்தியேக இடங்களில் மஞ்சள் சிவப்பு கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு எமது தேசத்தின் சொத்துக்களான மாவீரர்கள் நினைவு கூறப்படுகிறார்கள். அனைத்து தமிழ் மக்களும் ஒருமித்த உணர்வோடு எமக்காக உயிர் நீத்த மாவீரர்களை நினைவில் கோரி அவர்களுக்கு உரிய அஞ்சலி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்துள்ளனர். வெம்ப்ளி, ஹரோ, ஈஸ்ட்கம், இல்போர்ட், லூசியம் என தமிழர்கள் எங்கெல்லாம் கூடி வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எம் மாவீரர்களை மறக்காமல் நினைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.


எமது தாயாக பூமியில் எமது மாவீரர்களின் கல்லறைகளை இடித்து அழித்தாலும் அவர்களின் துயிலுமில்லங்களை தரைமட்டமாக்கினாலும் அவர்கள் மீது எமது மக்கள் வைத்திருக்கும் அளப்பரிய உணர்வுகளை எவராலும் சிதைத்துவிட முடியாது. எங்கெல்லாம் எங்களுக்கு தடைகளோ அங்கெல்லாம் நாம் தடை உடைத்து எம் காவல் தெய்வங்களான மாவீரர்களை என்றும் போற்றி வழிபடுவோம். பலதரப்பட்ட கலாச்சாரத்துடன் பல்லின மக்கள் வாழும் இந்த புலத்தில் வாழும் இளையோர்களாகிய நாம், இந்த விந்தை நிறைந்த உலக வல்லாதிக்கத்தின் நுன்னியங்களை அறிந்து அவர்களின் சமகால கோட்பாட்டுடன் ஒருங்கே பயணித்து சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறையையும் அராயகத்தையும் உடைத்தெறிவோம். ஈனத்தனமான துரோகச்செயல்களில் இருந்து எம்மின மக்களை மீட்டெடுத்து எங்களது அண்ணாவின் சொல்லிற்கு அமைவாக இலக்கு நோக்கிய பயணத்தை உறுதிதளராது மேற்கொள்வோம்.


-- 
Media Team
Tamil Youth Organisation - United Kingdom

No comments:

Post a Comment