தமக்கு துரோகி பட்டம் கிடைத்தாலும் கவலைப்படப் போவதில்லை என்று கொலையுண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருனிக்கா குறிப்பிட்டுள்ளார்.
தமது தந்தையின் கொலை தொடர்பி;ல் தாம் சர்வதேசத்தின் நீதியை கோருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டால், இந்த துரோகி பட்டம் கிடைக்கலாம். ஆனால் அதனைப்பற்றி பயப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் கொலை தொடர்பில் இலங்கையில் நீதி கிடைக்காவிட்டால் சர்வதேசத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை.
தமது தந்தையின் கொலை தொடர்பில் இலங்கையின் ஆளும் கட்சி, நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டும். உண்மையை மறைக்க முயலக்கூடாது என்று அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை நீதியற்ற நாடுகளின் ஆசிய நிலை பட்டியலில் முன்னிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக உலக நாடுகளின் தலைவர்களும் இலங்கையின் வன்முறைகள் தொடர்பில் கேள்வி எழுப்புகின்றனர் என்றும் ஹிருனிக்கா தெரிவித்தார்.
இலங்கையின் நீதி நிர்வாகத்தை நிலைநாட்ட படித்த புதிய இளைய தலைமுறை தேவை என்றும் அவர் குறி;ப்பிட்டார்.
No comments:
Post a Comment