சென்னை: நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் நிதி சிக்கனம் இருந்தால் விலை உயர்வை தடுக்கலாம். ஆனால் தமிழக அரசுக்கு அது தெரியவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியதாவது,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றேன். பால் விலை மற்றும் பேருந்து கட்டண உயர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம்.
நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் நிதி சிக்கனம் இருந்தால் விலை உயர்வை தடுக்கலாம். ஆனால் தமிழக அரசுக்கு அது தெரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தான் பால், பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு போதுமான நிதியை மானியமாக அளித்த பிறகு தான் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு மட்டும் மானியம் அளிக்காவிட்டால் பெட்ரோல் விலை தற்போது இருப்பதை விட அதிகமாக இருக்கும்.
பால் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம். வெற்றி பெற்றால் கொண்டாடுவதும், தோல்வியைத் தழுவினால் குறை சொல்வதும் என் பழக்கமில்லை. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு திமுக தான் காரணம் என்று குறை சொல்ல மாட்டேன் என்றார்.

No comments:
Post a Comment