மாவீரர்நாள்
மனசிற்குள் நினைவேந்தி
மலர் தூவும் நாள்
மௌன மொழி பேசி
மௌனவிக்கும் நாள்
செவ்வரத்தம் பூப்போலச்
சிரிக்கும் முகம் பார்க்க
எவ்வளவோ பேர் தவம் கிடக்கும் நாள்
அறி துயில் கொள்ளும் பரந்தாமர்களே
உருகி வேண்டி உறையும் நாள்
ஓ….. நெஞ்சு கனக்கும் நாள்
கண்கள் பனிக்கும் நாள்
கண்மணிகளே –உங்கள் கல்லறைத்தொட்டில்களே
காலியாகி விட்டன.
ஒத்தி எடுத்தாயிற்று
“ஈழத்துத் திருப்பதிகள்” இருந்ததாய்
ஒற்றைத்தடயமும் இங்கு இல்லை
விளக்கேற்றும் மேடையையுமா?
விழுங்கியது பூதம்
நிலத்தைப்பிளந்து நீறாக்கி
குளத்திலா கொட்டினார்கள்
திருவிடங்களையே
திருடிப் போயிற்றா காற்று
திசைகூடத் தென்படாத வாறு
திரை போட்டுவிட்டதா மேகம்
அனுங்காமல்…சினுங்காமல்
எங்குள்ளீர்கள்
எம் செல்வங்களே
நிரையாக இருப்பீர்;களே
நிலாப்போல சிரிப்பீர்களே
என்ன ஆனீர்கள்?
ஊரும் உறவும் ஒன்றாவதே
உம் நாளில் தானே
அழுதும் தொழுதும்
உம்மில் கலப்போமே
உயிரில் கரைவோமே
நெய்விளக்கின் நீள் ஒளியில்
நெக்குருகி நிற்போமே
மையிருளில் மாலைப்பொழுதில்
மண்டியிட்டுக் கொள்வோமே
வெய்யவரே உம்மிடத்தில்
உய்யவழி கேட்போமே
பொய்த்துப் போனதே யாவும்
நேற்றிருந்து உம் நினைவுகளை
நெஞ்சுக்குள் பொத்தினோம்
காற்றில் எழும் உம் குரல்களைக்
காதுக்குள் தேக்கினோம்
நினைவின் ஆறுதலுக்காய் இருந்த
நீர் அணிந்த ஒற்றைச் செருப்பும்
இப்போ எம்மிடம் இல்லை
கை தவறி விட்டது கடைசி வழியில்
நினைவுப் படங்களையும்
நிலம் கீறி விதைத்து விட்டோம்.
என் செய்வோம் இனி
பெற்ற பிள்ளைகளுக்குப்
பிதிர்க்கடன் செய்யக்கூட
பலனற்ற பாவியராகினோம்
ஒற்றைத்திரி ஏற்றி
ஒரு நிமிடம் அஞ்சலிக்ககூட
காற்றையும் நம்பமுடியாத காலம்
போ; சொல்லி அழவும் திராணிஅற்று
பெருமூச்செறிகின்றோம்
யார்க்குத்தெரியும் எம் அவஸ்த்தை
“அம்மா” “அப்பா” என
அழைப்பது போல் இருக்கும்
கண்துடிக்கும், மடிதுடிக்கும்
உம்மை நினைக்கும் போதில்
என்னென்னவே செய்யும்
உம் நினைவே எமக்கு தனிச் சுகம்
உம் ஞாபகம் மட்டுமே ஆறுதல்
எம் துணிவும் துணையும்
உம் நினைவு தான்
விழித்தால் கூட
உம் கனவு கலைந்து விடும் என்று
அதிக நேரம் விழிக்காமல் கிடக்கின்றோம்
எம் பிள்ளைகளே
உங்கள் தொழுகை இல்லாமல்
எங்கள் அழுகை தீராது
மனம் விட்டு அழுது
மறைவின்றி தொழுது
உமை வணங்கும் வரம் வேண்டும்
அதை நீங்கள் தரல் வேண்டும்
“வெய்யவரே உம்மை
வணங்கும் வரம் வேண்டும்”
மனசிற்குள் நினைவேந்தி
மலர் தூவும் நாள்
மௌன மொழி பேசி
மௌனவிக்கும் நாள்
செவ்வரத்தம் பூப்போலச்
சிரிக்கும் முகம் பார்க்க
எவ்வளவோ பேர் தவம் கிடக்கும் நாள்
அறி துயில் கொள்ளும் பரந்தாமர்களே
உருகி வேண்டி உறையும் நாள்
ஓ….. நெஞ்சு கனக்கும் நாள்
கண்கள் பனிக்கும் நாள்
கண்மணிகளே –உங்கள் கல்லறைத்தொட்டில்களே
காலியாகி விட்டன.
ஒத்தி எடுத்தாயிற்று
“ஈழத்துத் திருப்பதிகள்” இருந்ததாய்
ஒற்றைத்தடயமும் இங்கு இல்லை
விளக்கேற்றும் மேடையையுமா?
விழுங்கியது பூதம்
நிலத்தைப்பிளந்து நீறாக்கி
குளத்திலா கொட்டினார்கள்
திருவிடங்களையே
திருடிப் போயிற்றா காற்று
திசைகூடத் தென்படாத வாறு
திரை போட்டுவிட்டதா மேகம்
அனுங்காமல்…சினுங்காமல்
எங்குள்ளீர்கள்
எம் செல்வங்களே
நிரையாக இருப்பீர்;களே
நிலாப்போல சிரிப்பீர்களே
என்ன ஆனீர்கள்?
ஊரும் உறவும் ஒன்றாவதே
உம் நாளில் தானே
அழுதும் தொழுதும்
உம்மில் கலப்போமே
உயிரில் கரைவோமே
நெய்விளக்கின் நீள் ஒளியில்
நெக்குருகி நிற்போமே
மையிருளில் மாலைப்பொழுதில்
மண்டியிட்டுக் கொள்வோமே
வெய்யவரே உம்மிடத்தில்
உய்யவழி கேட்போமே
பொய்த்துப் போனதே யாவும்
நேற்றிருந்து உம் நினைவுகளை
நெஞ்சுக்குள் பொத்தினோம்
காற்றில் எழும் உம் குரல்களைக்
காதுக்குள் தேக்கினோம்
நினைவின் ஆறுதலுக்காய் இருந்த
நீர் அணிந்த ஒற்றைச் செருப்பும்
இப்போ எம்மிடம் இல்லை
கை தவறி விட்டது கடைசி வழியில்
நினைவுப் படங்களையும்
நிலம் கீறி விதைத்து விட்டோம்.
என் செய்வோம் இனி
பெற்ற பிள்ளைகளுக்குப்
பிதிர்க்கடன் செய்யக்கூட
பலனற்ற பாவியராகினோம்
ஒற்றைத்திரி ஏற்றி
ஒரு நிமிடம் அஞ்சலிக்ககூட
காற்றையும் நம்பமுடியாத காலம்
போ; சொல்லி அழவும் திராணிஅற்று
பெருமூச்செறிகின்றோம்
யார்க்குத்தெரியும் எம் அவஸ்த்தை
“அம்மா” “அப்பா” என
அழைப்பது போல் இருக்கும்
கண்துடிக்கும், மடிதுடிக்கும்
உம்மை நினைக்கும் போதில்
என்னென்னவே செய்யும்
உம் நினைவே எமக்கு தனிச் சுகம்
உம் ஞாபகம் மட்டுமே ஆறுதல்
எம் துணிவும் துணையும்
உம் நினைவு தான்
விழித்தால் கூட
உம் கனவு கலைந்து விடும் என்று
அதிக நேரம் விழிக்காமல் கிடக்கின்றோம்
எம் பிள்ளைகளே
உங்கள் தொழுகை இல்லாமல்
எங்கள் அழுகை தீராது
மனம் விட்டு அழுது
மறைவின்றி தொழுது
உமை வணங்கும் வரம் வேண்டும்
அதை நீங்கள் தரல் வேண்டும்
“வெய்யவரே உம்மை
வணங்கும் வரம் வேண்டும்”
No comments:
Post a Comment