
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனம் ஆரம்பித்துள்ள 10 நாட்கள் மொழிப் பயிற்சி வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுகின்ற தமிழ் மொழிமூல அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெற்கில் அரச ஊழியர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கவும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச ஊழியர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்கவும் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்படுகின்றது. ___
No comments:
Post a Comment