இந்தியாவில் இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பு (ஈர்ய்ச்ங்க்ங்ழ்ஹற்ண்ர்ய் ர்ச் ஒய்க்ண்ஹய் ஒய்க்ன்ள்ற்ழ்ஹ்) உள்ளது. அதில் ஆற்றல் தணிக்கை மற்றும் மேலாண்மைக்கான அமைப்பு (ஊய்ங்ழ்ஞ்ஹ் ஆன்க்ண்ற் & ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஈங்ப்ப்) உள்ளது. அவர்கள் பல்வேறு பெருந்தொழில் நிறுவனங்களில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான வழிவகைகளைக் கணக்கிட்டு மின்சேமிப்பிற்கு வழிவகுத்துக் கொடுக்கின்றனர். மின்ஆற்றல் தணிக்கை (ஊப்ங்cற்ழ்ண்cஹப் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஆன்க்ண்ற்), வெம்மை ஆற்றல் தணிக்கை (பட்ங்ழ்ம்ஹப் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஆன்க்ண்ற்), காற்றழுத்த தேவைகளின் தணிக்கை (ஆண்ழ் ஈர்ம்ல்ழ்ங்ள்ள்ர்ழ் ஆன்க்ண்ற்) என நுண்மையாக பல ஆற்றல் தணிக்கைகளைச் செய்து திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கு வழிவகுக்கின்றனர்.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை வீடுகள், சிறு தொழில், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம் என்று பல்வேறு துறைகளில் மேற்கொள்ள முடியும். ஆனால் இதுபற்றி வெகுஜனமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அணுஉலைகளை அமைக்கக் காட்டும் முனைப்பை அரசு எந்தப் பிரச்சினையும் இல்லாத இந்த ஆற்றல் மூலத்தை (ஊய்ங்ழ்ஞ்ஹ் நர்ன்ழ்cங்) உருவாக்குவதற்குக் காட்டவில்லை.
1994-ல் இருந்தே அரசிற்குத் தெரிந்திருந்தும், புதிதாக கவனத்திற்கு வந்ததுபோல் 2011 முதல் 2015ற்குள் 19000 மெகாவாட் மின் சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறையின் வலைதளம்.
இவ்வளவு முக்கியமான துறைக்கு நிதி எவ்வாறு மத்திய அரசு வழங்குகிறது தெரியுமா? மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும். அப்படி அளித்த தொகையிலிருந்து தொகுப்பு நிதி (ஈர்ழ்ல்ன்ள் என்ய்க்) உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு நிதி உதவி செய்யுமாம்; 2009-2010 முதலான கடந்த மூன்று நிதி ஆண்டுகளுக்கு இந்தியா முழுமைக்குமாக உயர்ந்தபட்சமாக 70 கோடி ரூபாயை மாநில ஆற்றல் சேமிப்புத் தொகைக்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு (இன்ழ்ங்ஹன் ர்ச் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஊச்ச்ண்cண்ங்ய்cஹ்) கொடுக்கலாம். மத்திய அரசு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தேசிய நடவடிக்கை (சஹற்ண்ர்ய்ஹப் ஙண்ள்ள்ண்ர்ய் ர்ய் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஊச்ச்ண்cண்ங்ய்cஹ்) என 2008ல் அறிவித்து, 2011ல் அதற்கு 235.35 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு, 108.03 கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளது.
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைப் பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு இன்றளவும் இந்த பேருண்மை மூடி மறைக்கப்பட்டு வருகிறது. கூடங்குள அணுஉலைகளை ஒட்டிய இந்த விவாதத்தின்போதும் அது மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.
இம்மாதிரியான விடயங்களைப்பற்றி எல்லாம் சொல்லிக் கொடுத்து, புரியவைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை செயல்முறையில் பல்வேறு துறைகளில் அமல்படுத்திக் காண்பித்து வழிநடத்திச் செல்வது திறம்பட ஆற்றலைப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருக்கிற பிரதமருக்கும், அரசு அதிகாரிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் கடமை ஆயிற்றே! அவ்வாறு எதையும் செய்யாமல் அணுசக்தி தவிர மாற்று எதுவும் இல்லை என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? எவ்வகையில் விஞ்ஞானப்பூர்வமானது? இதுதான் நம் பாரதப் பிரதமர் கடைபிடிக்கும் தர்மமா? அதற்கு பதிலாக பொறுப்பைத் தட்டிக் கழிப்பது, போராடுகிற தங்கள் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வீண்பழி சுமத்துவது எவ்வகையில் நியாயம்?
மத்திய திட்டக்குழு ஆராய்ச்சிக்கான தொகைகளைப் பட்டியலிடுகிறது. அணு ஆராய்ச்சிக்கு 610 கோடி ரூபாயும், மற்ற ஆற்றல் தொடர்பான அனல், புனல், திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சேர்த்து 70 கோடி ரூபாய் செலவழிப்பது எந்த வகையில் நியாயம்!
மின்சாரப் பயன்பாட்டில் மிக முக்கியமாக நம்மிடமுள்ள மின் மோட்டார்கள்தான் தேவையின்றி அதிகளவு மின்சாரத்தைக் காலி செய்து வருகிறது. அரசால் திறம்பட்ட மின்மோட்டார் தயாரிக்க போதுமான ஊக்கம் அளிக்கப்படவில்லை. மக்களுக்குத் தெளிவாக இவை பற்றி எல்லாம் விளக்கப்படாததால் ஏற்கெனவே பல்வேறு பொருளாதாரச் சுமையில் உள்ள மக்கள், குறைந்த விலை உள்ள மோட்டார்களையே வாங்குகின்றனர். இதனால் இந்தியாவில் உயர்ந்த திறன் கொண்ட மோட்டார்கள் உருவாக்கப்படுவது மிகச் சொற்பமாக இருந்து வருகிறது. இதனால் இந்த குறைந்த விலை மோட்டார்களைப் பயன்படுத்துவோருக்கு, மின்துறை, அரசு என்று அனைவருக்குமே நஷ்டம்தான்!
கோவை போன்ற தொழில் நகரங்களில், தொழில் முனைவோர் நல்ல மோட்டார்கள் வாங்கத் திணறி வருகின்றனர். அதிகரித்து வருகிற மின்சார விலையின் தீவிரத்தில் தொழில்கள் முடங்கி வருகின்றன. ஏற்கெனவே நசிந்து வருகிற விவசாயத்துறையில் இம்மாதிரியான திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகள் பம்ப் செட்டுகளின் வாழ்நாளை நீட்டிக்கும். அரசிற்கு மின்கடத்தலில் ஆகும் செலவினத்தைக் குறைக்கும். நம் விவசாயிகள் விவரம் அறியாத நிலையில் அரசால் வைக்கப்பட்டு இருக்க, அவர்கள் படிப்பறிவு பெரிதும் இல்லாத நம் ரீவைண்டர்களிடம் கொடுத்து அடிக்கடி மோட்டாருக்கான காயில் கட்டி வருகிறார்கள். இதனால் தேவையற்ற மின்விரையம் ஆகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 20 லட்சம் பம்ப் செட்டுகள் உள்ளன. அப்படியென்றால் இந்திய அளவில் எவ்வளவு மின்சக்தியை மிச்சப்படுத்த முடியும்!
பல நாட்டு அனுபவங்களிலிருந்தும், நம் நாட்டின் மின்துறை பற்றிய சிறிய ஞானத்தோடு உள்ளோர்க்கும் இது பற்றிய அதிமுக்கியத்துவம் தெரியும்!
மின்பயனீட்டாளர்களுக்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை மேற்கொள்வதற்கான வழிவகைகளும் தெரியவரவில்லை. திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம் தெரிந்த தொழில் முனைவோருக்கு அம்முறைகளை மேற்கொள்ளத் தேவையான நிதி உள்ளிட்ட ஊக்கத்தை அரசு அளிக்கவில்லை. மின்பயனீட்டாளரும் பயனடையவில்லை; நாடும் பயனடையவில்லை; மக்களுக்கும் பயன் போய்ச் சேரவில்லை.
கிராமங்களில் உள்ள குண்டு பல்புகளை ஈஎக விளக்குகளைக் கொண்டு மாற்றுகிறோம் என்ற திட்டத்தை மட்டும் அரசு கூறுகிறது. அதிலும்கூட இப்போது கஊஉ விளக்குகள் மிகக்குறைந்த அளவுதான் செலவிடுகின்றன. பெருந்தொழில் நிறுவனங்கள் கஊஉ விளக்குகளுக்கு மாறிப் பயனடைகின்றன என்ற தகவல்கள் உள்ளதே! இது பற்றி செய்தியைக்கூட விவரமாக திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு (இன்ழ்ங்ஹன் ர்ச் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஊச்ச்ண்cண்ங்ய்cஹ்) தரவில்லையே! கஊஉ விளக்குகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதா?
மற்ற நாடுகளில் மின் மோட்டார்களை திறம்பட்டவையாக உருவாக்குவதற்கான தரக்கட்டுப்பாட்டு நிர்ணயங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எழ்ர்ள்ற் எழ்ங்ங் ப்ரிட்ஜ், ஏ.சி., டியூப்லைட் (பன்bங் கண்ஞ்ட்ற்), பகிர்மான டிரான்ஸ்பார்மர்கள் என நான்கிற்கு மட்டும் தர நிர்ணயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏன் மின்மோட்டார்களுக்கான தரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்தவில்லை? ஏன் சமையல் அடுப்புக்கான தரக்கட்டுப்பாடுகளை அமல்படுத்தவில்லை?
இப்படிப்பட்ட பயனுள்ள செய்திகள் எல்லாம் தெரிந்தால் நசிந்து வருகிற தொழில்துறை, விவசாயம், போட்டா போட்டி உள்ள வணிகம் என எல்லாத்துறைகளிலும் இருக்கிறவர்கள் இவற்றைச் செயல்படுத்த மாட்டோமா? நமக்கு இவைபற்றியான செய்திகள் தெரியவே வரவில்லையே? இதுபற்றியான முக்கியத்துவம் புரியவைக்கப்படவில்லையே? அப்படி நமக்குத் தெரிந்திருந்தால், அரசாங்கம் நிதி உள்ளிட்ட உதவிகளைச் செய்தால், நாமும் பயன்பெற்று, சேமிப்புக் கலாச்சாரம் உள்ள நாம் நாட்டுக்கும் பூமிக்கும் நன்மைகளைச் செய்யமாட்டோமா என்ன? நம்முடைய பெரும் விஞ்ஞானிகள் எல்லாம் இதைப் பற்றி தெளிவுபடுத்தக் கூடாதா?
அமெரிக்காவில், கடன்களைப் பலர் திரும்பச் செலுத்த முடியாத சூழல்நிலை. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் ஒரு வேடிக்கை! லாபநோக்கற்ற, மக்கள் சார்பான ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் பொருளாதார செழிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சபை (ஆம்ங்ழ்ண்cஹய் ஈர்ன்ய்cண்ப் ச்ர்ழ் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஊச்ச்ண்cண்ங்ய்ற் ஊcர்ய்ர்ம்ஹ்) இது பற்றிக் கூறுகிறது: ''திறம்பட்ட மின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட கடன்கள் பெருமளவில் அடைக்கப்பட்டுள்ளன'' என்கிறது. ஆனால் நம் அரசோ பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு அவர்களுக்குப் பல்லாயிரம் கோடிகள் கொடுத்து அணுஉலை மூலம் மின்சாரம் தயாரிக்க பெருமுயற்சி எடுக்கிறது. திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான திட்டங்கள் எதுவும் நம் நாட்டில் திறம்பட வகுத்துச் செயல்படுத்தப்படவில்லை.
1999 முதல் 2010ஆம் ஆண்டு வரை தன்னார்வமாக திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் மிகச்சில பெருந்தொழிற்சாலைகள் மட்டுமே சேமித்த தொகை 13,399 கோடி. அவர்கள் இம்முறைகளை அமல்படுத்துவதற்குச் செய்த முதலீட்டை 20 மாதங்களில் திரும்பப்பெற்றனர்.
இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு உலகமே வேண்டாம் என்று ஒதுக்குகிற அணு உலைகளை மட்டுமே மக்களாகிய குழந்தைகளுக்கு காண்பித்து அதையே இயக்க வேண்டும் என்பது; ஒவ்வாமை இருக்கும்போது திணித்துவிட பிரம்ம பிரயத்தனம் செய்வது; பிள்ளைகளாகிய மாநில அரசாங்கத்தையும், உள்ளாட்சி அமைப்புகளையும் மிரட்டுவது; தொழில் நுட்ப காரணங்களைச் சொல்லி மக்கள் உணர்வுகளை மதிக்காமல் இருப்பது; இலவசங்களைக் காட்டி ஏமாற்ற முயல்வது எந்த வகையில் நியாயம்?
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் அணுஉலைத் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு வேண்டும் என்றார். திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை அமெரிக்காவிடம் சொல்லித்தரக் கேட்கவில்லை. இருக்கட்டும்! இரசியாவிடம் அல்லது ஜப்பானிடமாவது இதுபற்றி எல்லாம் கேட்கக்கூடாதா? புதிய மின்நிலையங்களைக் காட்டிலும் மிகக்குறைந்த செலவினம் வாய்ந்த இம்முறைகளை கவனித்துச் செயல்படுத்தியிருந்தால் மக்கள் பயனடைந்திருப்பரே! நாடும் புவியும் பயனடைந்திருக்குமே!
இம்முறைகளை சொல்லிக்கொடுக்க முன்வருகின்ற அறிஞர்கள் பல நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்தந்த நாட்டில் உள்ள அனுபவங்களை எல்லாம் பிரதமர் கேட்டுப் பெற்றிருக்கலாமே? நம் அனைவருக்கும் இது பயனுள்ளதாக அமைந்திருக்குமே!
ஆக, பிரதமர் தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில் பேசினாரே, நீண்டகால அக்கறை தேவை, குறுகியகால அக்கறை இருக்கக்கூடாது என்று! இது யாருக்குப் பொருத்தமானதாக இருக்கிறது?
அணுஉலைக்கான இந்த மாற்று ஒன்று இருக்கிறதே! இப்போதாவது அரசு தன் திட்டம் என்னவென்று சொல்லலாமே? இனிமேலாவது சாத்தியமான சேமிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்குத் தேவையான தரவுகளை (க்ஹற்ஹ) எடுப்பதற்கு அரசு முயற்சி செய்யலாமே? திட்டங்கள் வகுத்து இம்முறைக்கான இலக்குகளை வைத்து அதை அடையுமா நம் அரசு?
இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் மின்சேமிப்பு நிச்சயம் அரசின் ஆற்றல் துறை வலைதளத்தில் போட்டுள்ள 25,000 மெகா வாட் அல்ல. அதைக் காட்டிலும் பன்மடங்கு சாத்தியம் என்பதை விசயமறிந்தவர்கள் அறிவர்!
2032ல் அணு உலைகள் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களைக் கொண்டு அணு மின் உற்பத்தி செய்யும் திட்டத்தையும் சேர்த்து அணு உலைகளின் மூலம் 50,000 மெகா வாட் மின் சக்தி உருவாக்கத் திட்டம் என்று கூறிவருகின்றனர் அணு விஞ்ஞானிகள். ஆனால்,
இந்திய அரசின் தொழில் நுட்பம், தகவல், முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான கவுன்சில் (பஒஎஆஈ) வெளியிட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் பார்த்தாலே குறைந்தபட்சம் 45,000 மெகா வாட்டுக்கு மேல் கிடைப்பது நிச்சயம்! அதையும் குறைந்த செலவில், மக்கள் வரிப்பணம் வீணாகாமல், அணு அபாயம் ஏதும் இல்லாத வகையில் மிக எளிமையாக சில ஆண்டுகளிலேயே பெற்று விட முடியும்! அந்நிய பன்னாட்டு நிறுவனங்களை நம்பி நாம் பல லட்சம் கோடி ரூபாய் செலவிட வேண்டிய பேரழிவு அபாயத்தை உள்ளடக்கிய அணு மின்சார உற்பத்தியை விட, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளினால் அரசுக்கு மிகக் குறைந்த செலவே ஆகும்! மக்கள் அனைவருமே இம்முறையை விரும்புவர்! எந்தச் செயலைச் செய்வதற்கும் தடைகள் சில இருக்கும். பிரதமரவர்களே! குறுகிய கவலைகள் இல்லாமல் நீண்டகால, தொலை நோக்குப் பார்வை வேண்டும் என்று சொன்னீர்கள் அல்லவா!
நீண்டகாலப் பார்வையில் தரவுகளைக்கூட மத்திய அரசு எடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருர்ஷ்டமான விசயம். அமெரிக்காவில் இதற்கென ஆற்றல் தகவல்களை அளிக்கும் நிர்வாகம் (ஊய்ங்ழ்ஞ்ஹ் ஒய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் ஆக்ம்ண்ய்ண்ள்ற்ழ்ஹற்ண்ர்ய்) என்ற பெரும் அமைப்பே உள்ளது. ஆனால் நம் நாட்டில் மத்திய மின்சார ஆணையமும் (ஈங்ய்ற்ழ்ஹப் ஊப்ங்cற்ழ்ண்cண்ற்ஹ் ஆன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்), திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பும் (இன்ழ்ங்ஹன் ர்ச் ஊய்ங்ழ்ஞ்ஹ் ஊச்ச்ண்cண்ங்ய்cஹ்) திறம்படச் செயல்படவில்லை. ஆக, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளின் மூலம் எந்தளவிற்கு சேமிக்க முடியும் என்பதைச் சரியாக சொல்லக்கூட முடியாத நிலையில் உள்ளோம். இப்படி உள்ள போது, அணுசக்தி மட்டுமே மாற்று என்று பொருளாதார நிபுணரான பிரதமரும், ஏவுகணை விஞ்ஞானியும், மேதகு முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாம் அவர்களும் எவ்வாறு கூறுகின்றனர்? உலக நாட்டில் நடப்பவற்றைப் பார்த்தால் நிச்சயம் நம் நாட்டில் 50,000 மெகாவாட் சேமிப்பது மிக எளிதே! மின்சாரத்துறையில் மட்டுமே இவ்வளவு சேமிப்பு, ஆற்றல் துறையில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை அமல்படுத்தினால் நமக்கு எரிவாயு, பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு ஆகும், அதிகரித்து வரும் செலவுகள் குறையும் என்பது தெள்ளத் தெளிவு.
மக்கள் சார்ந்த நல்ல விடயங்கள் எங்கிருந்து வந்தாலும் நாம் நீரைவிடுத்துப் பாலை உண்ணும் அன்னப் பறவை போலிருக்க வேண்டும். உண்மைகள் இவ்வாறிருக்க, இது ஏதோ அணு உலைப் பாதுகாப்பு சம்மந்தமான பிரச்சினையாகவும், மக்கள் பீதியடைந்திருக்கிறார்கள்; அவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் வாதங்களை மத்திய அரசு முன் வைக்கிறது. அதிகார அணுவிஞ்ஞானிகள் அணு உலையை ராணுவத்தைக் கொண்டேனும் இயக்குவோம் என்று துடிக்கின்றனர். அவர்கள் உள்ளுர் மக்களின், உள்ளாட்சி மன்றங்களின், மாநில அரசுகளின் நலன்களையும், உணர்வுகளையும் மதியாது இருக்கின்றனர்.
'கூடங்குள அணுஉலைகளை இயக்கி அவற்றிலிருந்து கிடைக்கும் 925 மெகாவாட் மின் சக்தியை நாங்கள் தமிழகத்துக்கு அளிப்பதில் உறுதியாக உள்ளோம். கூடங்குள அணுஉலைகள் இயங்காவிட்டால் தமிழ்நாடு முன்னேறவே முடியாது என்றெல்லாம் மிரட்டலை பிரதமர் விடுவதும், பிரதமர் அலுவலக அமைச்சர் முதற்கொண்டு 'தமிழக முதல்வர் கமிட்டி அமைக்காததால்தான் நாங்கள் கமிட்டி அமைக்கவில்லை' என்றெல்லாம் மாநில அரசையும், முதல்வரையும் சீண்டியதும்; எந்த வகையில் நியாயம்! இந்திய அணுசக்திக் கழகத்தின் தலைவர் பாணர்ஜி தொழில்நுட்ப விடயங்களை எல்லாம் சொல்லி மிரட்டுகிறாரே!
நடப்பவை எல்லாவற்றையும் பார்க்கும்போது கல்வியறிவு பெற்றவர்களுக்கே உண்மையில் இந்த அணு உலைத்திட்டங்கள் 'நம் நலனுக்கும் நம் தலைமுறையின் நலனுக்காகவும்தானா? என்ற பேரச்சம் ஏற்படுகிறதே! விபத்து ஏற்பட்டதென்றால் பன்னாட்டுக் கம்பெனிகள் கையை விரிக்கப் போகின்றன. நாம்தானே அவற்றுக்குப் பொறுப்பு! நம்முடைய வரிப்பணம்தானே செலவு! ஆக, அணு ஆற்றல் சரியா? பெரும் செலவு இல்லாத திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு நல்லதா?
விடயம் இப்படி உலகளாவிய ஒன்றாகவும், பெரும் போர்களை ஏற்படுத்துகின்ற ஆற்றல் சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் இருக்க, இது ஏதோ அணு விஞ்ஞானிகள், அணுவிஞ்ஞானம் அறிந்தவர்கள், அரசுகள் அமைக்கும் குழுக்கள் மட்டுமே கடலையும் அதன் ஆற்றலையும் சமாளித்து தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும். பெருமளவு ஏட்டுக் கல்வி அறியாத கூடங்குள பகுதியைச் சேர்ந்த எளிய மக்களுக்கு தொழில்வல்லுனத்தன்மை நிறைந்த சொல்லாடல்களை கொண்டு அவர்களின் வாழ்வு, வாழ்வாதாரம், சந்ததிகளின் நலன் பற்றி எழுந்துள்ள பேரச்சத்தையும், நம் அனைவருக்கும் எழுந்துள்ள சந்தேகங்களையும் அச்சத்தையும் போக்கிவிட முடியுமா?
அதைவிடக் கூடுதலாக, வெறும் அணுவிஞ்ஞான தளத்தில் எடுக்கப்படுகின்ற முடிவல்ல இது! அரசியல், பொருளாதாரம், நம் வாழ்வு முறை என பல தளங்களைச் சேர்ந்தோர் பங்கேற்று தீர்வு காண வேண்டிய விடயம்!
இந்த ஆற்றல் பிரச்சினை நீண்டகாலப் பிரச்சினையாகும்! அது பற்றிய தகவல்கள் அனைத்தும் திரட்டி அதற்கான தீர்க்கமான தீர்வு காண வேண்டும். நிச்சயமாக அரசாங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலத்தின்படியே குறைந்தது 2015ல் 19,000 மெகாவாட் மின்சக்தியை தொழிற்துறை, வணிகத்தில் மட்டுமே சேமித்து விட முடியும். 2020ல் 20,000 மெ.வா. சூரிய சக்தியைப் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான வேலைகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டால், படிப்படியாக தொழிற்துறை தவிர்த்த மற்ற துறைகளில் மின்சாரம் மற்றும் பிற ஆற்றல்களைச் சேமிப்பதில் கவனம் செலுத்தினால் 2020ற்கு திட்டமிட்ட அணுமின் சக்திக்கான நிறுவு திறனை, திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலமே மிகக் குறுகிய காலத்தில் அடைந்து, நிச்சயம் நாம் ஆற்றல் துறையில் தன்னிறைவை அடைந்துவிட முடியும்! தவிர மற்ற மாற்று ஆற்றல் மூலங்களும் நம் இலக்கினை எட்டக் கை கொடுக்கும்!
ஆகவே கூடங்குள அணுஉலைப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும்! அனைத்துத் தளங்களைச் சேர்ந்தோரும் பங்கேற்கும் விஞ்ஞானப்பூர்வ விவாதத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து அணுஉலைகளையும் பற்றிய இறுதி முடிவுக்கு வரலாம்!
திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டினால் ஏற்படும் நலன்கள்
1. இது காலங்காலத்திற்கும் பலன் அளிப்பதாக, இருக்கின்ற எல்லா ஆற்றலுக்கான மூலங்களைக் காட்டிலும் முதன்மையான மூலமாகும்.
2. இது அபாயங்கள் ஏதும் உள்ளடக்காதது; சுற்றுச்சூழல் சீர்கேட்டை குறைக்க உதவும்.
3. இது நேரடியாக மின்நிலையங்களை நிறுவுவதை தேவையற்றதாக்கி, பதிலாக அரூபமாக மின்நிலையங்களை உருவாக்குவதற்குச் சமமானதாகும். இது மக்கள் வரிப்பணத்தை விரையம் செய்யாமல் மின்சக்தி திறன் கிடைக்க வழிவகுக்கும் முறை. ஏற்கெனவே உள்ள மின்நிலையங்களை வைத்தே நம் தேவைகளை நிறைவுசெய்ய உதவும்.
4. இம்முறையின் மூலம் அரூபமாக மின்திறனை உருவாக்கி, புதிய நிலையங்களைத் தவிர்ப்பதே மிகக் குறைந்த செலவினம் கொண்டதாகும்.
5. இம்முறையை மேற்கொள்ள சில சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரலாம். அவ்வாறு அந்நடவடிக்கைகளுக்குச் செலவிடும் தொகை 1 முதல் 3 வருடங்களில் திரும்பக் கிடைத்துவிடும். அதன் பிறகு சீர்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட சாதனத்தின் வாழ்நாள் காலம் முழுக்க நமக்கு கிடைப்பது லாபம் மட்டுமே!
6. இது அதிகரித்து வரும் நம் மின் செலவு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றின் செலவுகளைக் குறைத்து அவற்றிற்கான அதிகரித்த செலவுகளில் இருந்து நம்மைக் காக்கும்.
7. ஒரு யூனிட் மின்சாரத்தை மின் பயனீட்டாளர் சேமித்தால் உண்மையில் 2 முதல் 2ணீ யூனிட்டுகள் மிச்சமாகும்.
8. வீடுகள், சிறுதொழில்கள், விவசாயம், தொழிற்சாலைகள், வணிகம், போக்குவரத்து என்று பலவற்றிலும் இம்முறையை மேற்கொண்டு நலம், தொழில்வளம் பெறமுடியும்.
9. வேலை என்றால் சாப்ட்வேர் தொழில் என்ற நிலை போய், அனைத்துத் துறைகளிலும் நம் நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.
10. இது உண்மையாகவே மக்கள் சார்பான பொருளாதாரத்திற்கு வழிவகை செய்யும்.
11. இது புதிய வேலைகள் ஏற்படுத்துவதால் வெளிநாடு, நீண்ட தொலைவில் உள்ள இடங்களில் சென்று வேலை பார்க்கும் நிலையைக் குறைத்து உள்ளூர் அளவில் தொழில்களைப் பெருக்கும்.
12. இது கிராமம், நகரம் என அனைத்தும் முன்னேற வழிவகுக்கும்.
13. இது வணிகத்தைப் பெருக்கும்.
14. இதனால் நகர்ப்புற நெரிசல் குறையும்.
15. இம்முறைகளை மேற்கொள்ள வழங்கப்படும் கடன்தான் உத்தரவாதத்தோடு திரும்பச் செலுத்தப்படும் கடனாக இருக்கும்! |
No comments:
Post a Comment