Translate

Tuesday, 6 December 2011

முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால் தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்


முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால்
தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்  அறிக்கை

முல்லைப் பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிட மூர்க்கமாக முயல்கிறார்கள் மலையாளிகள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரசும் சர்வதேசியம் பேசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலை யாளிகளிடம் இனவெறியைத் தூண்டி, அணையை உடைப்பதற்கான ஆயத்தங்கள் செய்து வருகின்றன.


எல்லா அதிகாரங்களையும் தன்னிடம் குவித்து வைத்துள்ள இந்திய அரசு, கேரளத்தைக் கட்டுப்படுத்தி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தி வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிகாரம் ஏதுமற்ற அப்பாவிபோல் நயவஞ்சக நாடகமாடுகிறது. மலையாளிகளின் இனவெறி அரசியலை மறைமுகமாக ஊக்குவிக்கிறது.

உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் கேரள அரசும், அரசியல் கட்சிகளும் கழிவறைத் தாளுக்குத் தரும் மதிப்பைக்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குத் தரவில்லை. 142 அடிவரை தண்ணீர் தேக்கவிடாமல் தமிழகத்தைத் தடுத்துவிட்டார்கள். சிற்றணையை செப்பனிடவும் விடவில்லை. மண்ணியல் வல்லுநர் குழுவையும், நீரியல் வல்லுநர் குழுவையும் அமர்த்தி அவற்றைக் கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந்துரைக்கு ஏற்பவே மேற்படித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பைச் செயல்படுத்த வலியுறுத்தி மீண்டும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அவ்வழக்கு, விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையைத் தகர்த்துத் தரைமட்டமாக்கிடும் சதித்திட்டத்தை மூடி மறைத்து புதிய அணை கட்டப்போவதாக ஆசை வார்த்தை காட்டினார்கள். இப்போது அந்த மூடு திரையை நீக்கிவிட்டு அணையை உடைப்போம் என்று அம்மணமாக அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள்.

அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட 2.3 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தைக் காரணம் காட்டுகிறார்கள். இதற்குமுன் 2001-ல் இடுக்கியில் 4.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட நிலநடுக்கம், அணையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை அவர்கள் மறைக்கிறார்கள். 2011 சனவரி 20 ஆம் நாள் அணையை ஆய்வு செய்த இந்திய அரசின் வல்லுநர் குழு அணை வலுவாக இருப்பதை உறுதி செய்தது.

மலையாளக் காங்கிரசுத் தலைவர்களும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுத் தலைவர்களும் பொய்யுரைக்கக் கூச்சப்படாதவர்கள்; புரளி கிளப்ப அச்சப்படாதவர்கள். முல்லைப் பெரியாறு அணை உடைந்து 35 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் மிதப்பது போல் மோசடியாகப் பரப்புரைக் குறுந்தகடு தயாரித்து கேரளத்தில் ஊர் ஊராக போடச் செய்தார் அப்போதைய மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். இப்போது மலையாளிகள் அதே புரளியை ஒரு திரைப்படமாகத் தயாரித்து அணை 999 என்ற பெயரில் பல மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்திற்கு இந்திய அரசின் தணிக்கைத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மலையாள இனவெறியர்களும் அவர்களின் ஊடகங்களும் பரப்பி வரும் வதந்திகளை ஒரு வாதத்திற்காக ஏற்றுக்கொண்டால் கூட, முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அவர்கள் கூறிவரும்  பேரழிவு ஏற்பட வாய்ப்பே இல்லை. காரணம் அவ்வணையின் மொத்தக் கொள்ளளவு 10 டி.எம்.சி. மட்டுமே. (1 டி.எம்.சி = நூறு கோடி கன அடி). முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணையின் மொத்தக் கொள்ளளவு 70 டி.எம்.சி. ஆகும்.

இந்த இடுக்கி அணை பாதியளவு நிரம்புவதற்குக் கூட அதற்கு நீர் வரத்து இல்லை. இந்த அணையை முழுக்கொள்ளளவும் நிரப்பி, ஆண்டு முழுவதும் நீர் மின்சாரம் தயாரிக்க முல்லைப் பெரியாறு நீர் முழுவதையும் அபகரித்துக் கொள்ள வேண்டும், என்பதே மலையாளிகளின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த அவர்கள் வகுத்த சூழ்ச்சித் திட்டமே முல்லைப் பெரியாறு அணை  வலுக்குறைவாக உள்ளது, அது எந்த நேரத்திலும் உடைந்து விடும், எனவே அதை உடைத்துவிடவேண்டும் என்ற பரப்புரையாகும்.

தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாளைக்கு 700 டன் அரிசி, கேரளம் முழுவதுக்குமான இறைச்சி , காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் முதலியவை அன்றாடம் அங்கு போகின்றன. இவை நின்று போனால் கேரளம் மூச்சுத் திணறி உயிருக்குப் போராட வேண்டி வரும். தமிழக மணலை அன்றாடம் கொள்ளையடித்துக் கடத்திச் செல்லாவிட்டல் கேரளாவில் புதிய கட்டடங்கள் எழ வாய்ப்பே இல்லை.

முப்பது இலட்சம் மலையாளிகள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.இவர்களில் பெரும்பாலோர் தமிழர்களுக்குரிய உயர் பதவிகளையும், வருமானம் அதிகமுள்ள வணிகங்களையும், தொழில்களையும் கைப்பற்றி உள்ளார்கள்.

ஒருவர் ஓராண்டில் பயன்படுத்தும் தண்ணீரின் சராசரி அளவு 1700 கனமீட்டர். 30 இலட்சம் மலையாளிகள் ஓர் ஆண்டில் பயன்படுத்தும் தமிழகத் தண்ணீரின் அளவு 510 கோடி கனமீட்டர். முல்லைப் பெரியாறு அணைமூலம் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர்  வெறும் 12.6 கோடி கனமீட்டர் மட்டுமே. (பழ.நெடுமாறன், தினமணி 30-11-2011).

தமிழக நெய்வேலி அனல்மின் நிலையத்தில் இருந்து கேரளத்திற்குச் செல்லும் மின்சாரம் ஒரு நாளைக்கு 9 கோடி யூனிட். இத்தனை வழிகளில் கேரளம் தமிழ்நாட்டைச் சார்ந்து இருக்கிறது. ஆனால் இதற்கான  நன்றி உணர்ச்சி எதுவும் மளையாளிகளிடம் இல்லை.

தமிழர்களே, 1947 ஆகஸ்டு 15-க்குப் பிறகு நாம் இழந்துள்ள உரிமைகளை எண்ணிப்பாருங்கள். வெள்ளைக்காரன் தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டி 1924-ல் சிறந்ததொரு ஒப்பந்தம் செய்து வைத்தான். தில்லிக்காரன் ஆட்சியில் அது செல்லாது  என்று சொல்லிவிட்டார்கள். காலம் காலமாகக் காவிரியில் பாசனம் பெற்ற 28 இலட்சம் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது. 1895-இல் முல்லைப் பெரியாறு அணையைக்கட்டி 999 ஆண்டுகளுக்கு அது தமிழகத்திற்கு உரியது என்று ஒப்பந்தம் செய்துவைத்தான் வெள்ளைக்காரன். இன்று  அந்த ஒப்பந்தம் செல்லாது என்கிறார்கள், அணையை உடைக்க நாள் பார்க்கிறார்கள். அந்த அணையால் பாசனம் பெற்ற 2 இலட்சம் ஏக்கர் நன்செய் நிலம் பாழ்பட்டுக் கிடக்கிறது.

1950-க்குப் பிறகு பாலாற்றில் ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தமிழகத்திற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது ஆந்திரப் பிரதேச அரசு. இப்போது கடைசி எல்லையான கணேசபுரத்திலும் அணை கட்டுகிறது ஆந்திரம்.இனி பாலாற்றிலிருந்து கசிவு நீரும் தமிழகத்திற்கு வராது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு மூன்றையும் இழந்து விட்டால் பாசனத்திகு மட்டும்மல்ல குடிநீருக்கும் தமிழ்நாட்டில் தண்ணீர் கிடையாது.

1950களில் மொழிவாரி மாநிலம் அமைத்த பொழுது பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள ஊர்களையும், நகரங்களையும் மற்றும் இயற்கை வளங்களையும் , ஆந்திர, கர்நாடக, கேரள மாநிலங்களிடம்  பறிகொடுத்தோம். 1974-ல் நமது கச்சத்தீவை சிங்கள அரசுக்குக் கொடுத்தது இந்தியா.

சிங்களப் படையாட்கள் சற்றொப்ப 550 தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்ல இந்தியா துணைநின்றது. இனியும் தமிழக மீனவர்களைக் கொல்லவும், தமிழகக் கடற்பரப்பில் தமிழர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கவும் இலங்கைக்கு இந்தியா துணைநிற்கப் போகிறது. 2008-2009 ஆண்டுகளில் நம் உறவுகளான ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கும் ஈழ விடுதலைப்போரை வீழ்த்துவதற்கும் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் துணை நின்றது இந்தியா. 

இனியும் பொறுப்பது கூடாது தமிழர்களே..! எரிதழல் நெஞ்சில் ஏந்துங்கள்!

உலகின் மூத்த இனமான தமிழினம் நம் தலைமுறைக் காலத்தில் அழிந்து விட நமது செயலின்மை காரணமாக அமைந்து விடக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பதற்குரிய எல்லா வழிகளும் மூடப்பட்டு விட்டன. இந்திய அரசு, நீதித்துறை , இந்திய அரசமைப்புச் சட்டம் ஆகிய அனைத்தும் நம்மைக் கைவிட்டு விட்டன. பகைவனைப் பணிய வைத்து உரிமைகளைக் காப்பதைத் தவிர வேறு வழி இல்லை. மலையாள இனவெறியர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் நம் வாசல் கதவைத் தட்டுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மலையாளிகளையும் வெளியேறும்படிக் கோருவோம்.

நெய்வேலியிலிருந்து கேரளம் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி,
அதைத் தமிழ் நாட்டிற்கு வழங்கச் செய்வோம்.

கேரளத்திற்குச் செல்லும் எல்லாப் பாதைகளையும் மூடி,
கேரளத்திற்கு எதிராகப் பொருளாதார முற்றுகையை உருவாக்குவோம்.

இதற்கான பரப்புரை இயக்கத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 07.12.2011 அறிவன்(புதன்) அன்று தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தொடங்குகிறது. அதில் தமிழர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

வரலாறு நமக்கு வேறு மாற்றுப்பாதை எதையும் விட்டுவைக்கவில்லை!

களத்திற்கு வாருங்கள் தமிழர்களே!


                                                                    தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம் : தஞ்சை
நாள்  : 05.11.2011

No comments:

Post a Comment