தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை நிலை குலைய வைக்கும் முயற்சியில் ரி.ஆர்.ரி. வானொலி!
பாரிஸ் நகரிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலி சிங்கள தேசத்தின் விருப்பங்களோடு இணைந்து செயற்படுவது போலவே தோன்றுகின்றது.
இந்த வானொலியை ஆரம்பித்து நடாத்தும் ரங்கன் எனப்படும் சிறிரங்கன் ஆரம்ப காலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் செயற்பாட்டராகப் பணி புரிந்தார். இவரது தவறான செயற்பாடுகள் காரணமாக இவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்ட இவர், ஒரு கட்டத்தில் விடுதலைப் புலிகள் தன்னைக் கொலை செய்வதற்கு முற்பட்டதாக பிரஞ்சு காவல்துறையில் முறைப்பாடும் செய்திருந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக பிரான்சில் பதிவு செய்யப்பட்ட முதல் முறைப்பாடாக இது உள்ளது.
ஒலிபரப்புத் துறையில் இவருக்கு இருந்த நாட்டம் காரணமாக, ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி என்ற வானொலியிலும், அதன் பின்னர் அதே நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ரி.ஆர்.ரி. தமிழ் ஒளி என்ற தொலைக் காட்சியிலும் இணைந்து செயற்பட்டார். ஒரு கால கட்டத்தில், ரி.ஆர்.ரி. நிர்வாகத்தை அதன் இயக்குனராக இருந்த திரு. குகநாகனுடன் இணைந்து கைப்பற்றும் முயற்சி, அந்த நிறுவனத்தின் பங்காளர்களால் முறியடிக்கப்பட்டு, அந்த நிறுவனம் தமிழ்த் தேசிய தளத்திடம் கையளிக்கப்பட்டது.
நிர்வாகத்தினரது தமிழ்த் தேசியத் தளம் சார்ந்த இந்த முடிவை எதிர்த்து, திரு. குகநாதனுடன் இணைந்து 'டான்' நிறுவனத்தை உருவாக்கி, வானொலியையும் தொலைக் காட்சியையும் நடாத்தி வந்தனர். சிறிலங்கா அமைச்சர் டக்ளசின் நிதி வழங்கலுடன் இயங்கிய இந்த நிறுவனம், தேவை கருதி சிறிலங்காவுக்கு மாற்றப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கான சதி முயற்சிகளைத் தொடர்வதற்கான தளமாக ரி.ஆர்.ரி. வானொலி ரங்கனுக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது.
அன்றிலிருந்து, சிறிலங்காவின் அத்தனை சதி முயற்சிகளுக்கும் வேண்டிய பரப்புரைகளை மட்டுமல்ல, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்களைச் சிதைப்பதற்கான சதிகளுக்கான முயற்சிகளும் இந்த வானொலி மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. சிங்கள அரசின் திட்டத்துடன் புலம்பெயர் நாடுகள் எங்கும் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் தினச் சிதைவு முயற்சிக்கும் இந்த வானொலி அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த மாவீரர் தினச் சதி முயற்சியின் சூத்திரதாரிகளில் ஒருவரான தமிழரசனை அழைத்து நேரடியாகத் தேசிய சிதைவுப் பரப்புரையினை மேற்கொண்டிருந்தார்.
இந்த மாவீரர் தினச் சிதைவு முயற்சியைக் கைவிடும்படியான கோரிக்கையுடன் கட்டுரை எழுதிய பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பெதுச் செயலர் திரு. ச.வி. கிருபாகரன் அவர்கள் இந்த வானொலிக்குப் பேசு பொருளாக எடுக்கப்பட்டார். ரங்கனது தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல், சுவிசில் வசிக்கும் தேசியச் சிதைவு ஊடகவியலாளரான இரா துரைரெத்தினத்திற்கு அவலாக வழங்கப்பட்டது. இருவரும் இணைந்து நடாத்திய அசிங்க மேடை அந்த வானொலியைச் செவி மடுக்கும் ஒரு சில தமிழரையும் நெளிய வைத்தது.
முள்ளிவாய்க்காலின் பின்னர், தமிழ்த் தேசிய தளத்திலிருந்து பல தன்னல செயற்பாட்டாளர்கள் ஒதுங்கிக்கொண்ட நிலையிலும், மாறாத தேசியக் கடமையுடன் தனது பணிகளை இன்றுவரை ஐ.நா. மனித உரிமைகள் அவையிலும் தொடரும் திரு. கிருபாகரன் அவர்களை விமர்சிக்கும் தகுதி ரங்கனுக்கோ, துரைரெத்தினத்திற்கோ இல்லை என்பது வெளிப்படை. ஊடகம் ஒன்றை நடாத்துவதற்கான தகுதி நிலை ரங்கனுக்கோ, ஊடகவியலாளன் என்று அங்கீகரிக்கப்படும் நிலை துரைரெத்தினத்திற்கோ கிடையாது என்பதே தேசியம் சார்ந்த ஊடகவியலாளர்களது கருத்தாக உள்ளது. இதனைப் புரிந்து கொண்டு செயலாற்றத் தவறினால், வரலாறு இவர்களைத் தவறானவர்களாகவே பதிவு செய்யப்போகின்றது.
- அறிவழகன் (முன்னாள் போராளி)

No comments:
Post a Comment