ஈழத்தமிழ் மக்களுக்கெதிரான "இனப்படுகொலையை" மறைப்பதற்காக சிறீலங்கா இனவாதசிங்கள ஆட்சியாளர்களினால் நடாத்தப்படுகின்ற எந்தவொரு மாநாட்டிலும், நிகழ்வுகளிலும்; உலகத்தமிழ் மக்களினால் மிகவும் போற்றப்படுகின்ற மாமனிதரான நீங்கள், பங்குபற்றமாட்டீர்கள் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் மிகவும் நம்பிக்கையுடன்உள்ளார்கள்.
THE TAMIL CANADIAN ELDERS FOR HUMAN RIGHTS“Injustice anywhere is a threat to justice everywhere “Martin Luther King Jr.5310 Finch Ave. East, Unit. 10, Scarborough-On. M1S 5E8, Canada.Phone # 416 613 2787, Efax # 647 247 1010
E-mail: humanrights2611@gmail.com
REG# 1854792
05 December, 2011Dr. A. P. J. Abdul Kalam - Former President of India.
No 10, Rajaji marg,
New Delhi -110011.
No 10, Rajaji marg,
New Delhi -110011.
அன்புடையீர்,
ஈழத்தமிழ் மக்களுக்கெதிரான "இனப்படுகொலையை" மறைப்பதற்காக சிறீலங்கா இனவாதசிங்கள ஆட்சியாளர்களினால் நடாத்தப்படுகின்ற எந்தவொரு மாநாட்டிலும், நிகழ்வுகளிலும்; உலகத்தமிழ் மக்களினால் மிகவும் போற்றப்படுகின்ற மாமனிதரான நீங்கள், பங்குபற்றமாட்டீர்கள் என்று உலகத் தமிழர்கள் அனைவரும் மிகவும் நம்பிக்கையுடன்உள்ளார்கள். இந்திய பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களும்,தமிழர்களுக்கான அரசியல்உரிமைகள் வழங்கப்படும்வரை இலங்கைக்கு வருகைதரமுடியாது என்று இலங்கைஆட்சியாளர்களுக்கு அறிவித்து உள்ளார்கள். இலங்கையரசானது சர்வதேச போர்க்குற்றவிசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காதுவிட்டால் அந்நாட்டில் நடைபெறும் எந்தவொரு மாநாட்டிலும் பங்குபற்றுவதில்லையென்று கனடியப் பிரதமரும், பிருத்தானியப் பிரதமரும், அவுஸ்திரேலியப் பிரதமரும் அறிவித்துள்ளார்கள்.
ஈழத்தமிழர்களினால் அறுபதாண்டுகளுக்கு மேலாக நடாத்தப்பட்ட இனவிடுதலைப்போரிற்குபயங்கரவாத முலாம்பூசி, இறுதிக்கட்டப் போரில் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட பயங்கரஆயுதங்களைப்பாவித்து தமிழர்களின் போராட்டமானது மிகவும் கொடூரமான முறையில் சிங்களஆட்சியாளர்களினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தமானது திட்டமிட்டு எதுவித சாட்சிகளுமற்ற களத்தில் மிகவும் கொடூரமானமுறையில் நடாத்தப்பட்டுள்ளது. ஐநா அமைப்புக்களினதும், மனிதஉரிமை அமைபுக்களினதும்,சனல்4 போன்ற சுதந்திரமான ஊடகங்களினது நம்பகரமான அறிக்கைகளின்படியும், மன்னார்மாவட்ட கிரிஸ்துவப் பாதிரியாரின் சாட்சிகளின்படியும் இவ்யுத்தத்தினால் 146,000 மேற்பட்டமக்கள் காணாமற்போயும், இறுதி மூன்று நாட்களில் மட்டும் 40,000 மேற்பட்ட மக்கள் படுகொலைசெய்யப்பட்டும், 50,000 மேற்பட்ட மக்கள் அங்கவீனர்களாக்கப்பட்டும், இலங்கை அரசாங்கஅறிக்கையின்படி 98,000 மேற்பட்ட பெண்கள் விதவைகளாக்கப்பட்டும்,தாயின் கருப்பையில்உள்ள குழந்தைகூட வெளியே எடுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டும்,வெள்ளைக்கொடியேந்திவந்த விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களை, வாக்குறிதிகளைமீறி சுட்டுப்படுகொலை செய்தும், அனைத்துச் சர்வதேசிய விதிகளையும் மீறிபோர்க்குற்றங்களைப் புரிந்து இவ்விறுதி யுத்தமானது நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் இன்று அடிமைகளாக, அனைத்தையும் இழந்து இராணுவ அடக்குமுறைக்குள்எதுவித சுதந்திரமுமின்றி நிர்கதியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தமிழர்களின் மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் நிர்மூலமாக்கப்பட்டு; தமிழர்கள் வாழ்ந்த அத்தனை ஊர்களும் சிங்களமயமாக்கப்பட்டு சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள்.மண் ணின் மைந்தர்கள் தகரக் கொட்டில்களிலும், மரங்களுக்குக் கீழும் ஏதுமற்ற ஏதிலிகளாக பட்டிணியாலும், பாம்புக்கடியினாலும் மடிகின்றார்கள்.
சர்வதேசப் போர்க்குற்றச்சாட்டுக்களிருந்து தற்புவதற்காகவும், உலகத்தைஏமாற்றுவதற்காகவும் உங்களைப்போன்ற உலகத்தலைவர்களை அழைத்து மாநாடுகளைநடாத்துவதன் மூலம் தாங்கள் புரிந்த இனப்படுகொலையை மறைத்துவிடலாமென இலங்கைஆட்சியாளர்கள் நினைத்துச் செயற்படுகின்றார்கள்.இலங்கையில் நடந்த படுகொலையையும், 576ற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழ்நாட்டு மீனவர்களின் படுகொலைகளையும் நீங்கள் கண்டிக்கத்தவறியதையிட்டு உலகத்தமிழர்கள் மிகவும் மனவருத்த முற்றுள்ளார்கள்.
எனவே ஈழத்தமிழர்களுக்குரிய அரசியல் சுதந்திரம் கிடைக்கும் வரையும், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையும், போர்க்குற்றவாழிகள் தண்டிக்கப்படும்வரையும்,தமிழ்நா ட்டு மீனவர்கள் எதுவித உயிர் அச்சமுமின்றி தங்களின்மீன்பிடித்தொழிலை சுதந்திரமாகச் செய்யும் நிலை வரும் வரைக்கும் இலங்கைஆட்சியாளர்களின் எந்தக் கோரிக்கைக்கும் இணக்கந் தெரிவிக்க வேண்டாமென்று உலகத்தமிழ்மக்கள் அனைவரினதும் சார்பாக மிகவும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தங்களின் உண்மையுள்ள,
திரு. குமாரதாசன் ராசிங்கம், தலைவர்.
" . பேரம்பலம் கணபதிப்பிள்ளை, செயலாளர்.
திருமதி. உமாதேவி சிவசுந்தரம், பொருளாளர்,
திரு. சுப்பிரமணியம் மாசிலாமணி, பணிப்பாளர்.
" . செல்வராசா ராமுப்பிள்ளை, "
" . தியாகராசா சிவசுந்தரம், "
திருமதி.வல்துருத்தம்மா வேதநாயகம், "
திரு. விஐயகாந்தன் சுவாமிநாதன் "
No comments:
Post a Comment