தமிழனை அடக்கி ஆளும் வர்க்கமே, நீங்கள் ஒன்றை புறிந்து கொள்ள வேண்டும், உங்களுடைய சட்டத்தால் எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை தடுக்கலாம். எங்களின் பேச்சுக்களை தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வுகளையும், கனவுகளையும், எந்த சட்டத்தாலும், தடுக்க முடியாது.
சிலர் நாம் தமிழர் சீமானை விமர்சனம் செய்யுறாங்க. எப்படி எல்லா பிரச்சனைகளையும். பற்றி பேசும் நாம் தமிழர் சீமான். இப்ப கொஞ்ச காலமா எதை பற்றியும் பேசுவதே இல்லையே அமைதியா இருக்கார். சீமான் இருக்கும் இடம் கூட தெரியவில்லை இங்கு போனார் இந்த வீரர் என்று. இவர்களுக்கு சீமான் அவர்கள் விளக்கம் தருகிறார் கேளுங்கள்..
தமிழ் நாட்டில் எந்த பொது இடத்திலும் பேசுவதற்கும். போராட்டம் செய்வதற்கும். எனக்கு அனுமதி இல்லை. /விலைவாசி அதிகரிப்பு /அணு உலை பிரச்சனை / மீனவர் பிரச்சனை/ இன்னும் பல மக்கள் பிரஜ்ஜனைக்காக/ எல்லா கட்சிகளும் போராட்டம் செய்யுது. ஆனால் நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் அனுமதி இல்லை. நானும் இதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். பொது. போராட்டங்கலுக்கு. அப்போது அவசர அவசரமாக என்னுடம் வந்த காவல் துறையினர் சொன்னார்கள்.
நீங்கள் ஏற்பாடு செய்திருந்த எந்த கூட்டதிற்கும். போராட்டதிற்கும், அனுமதி இல்லை என்றார்கள். மற்ற கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அனுமதி கொடுத்து உள்ளீர்களே. ஏன் எனக்கு மட்டும் அனுமதி மறுக்கின்றார்கள். அவர்கள் சொன்ன பதில் நீங்கள் மக்கள் உணர்வு பெற்று விடுவார்கள். இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுவீர்கள். நீங்கள் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும். என்றார்கள். என்ன கொடுமைடா இது நான் பேசவில்லை என்றால் சட்டம் ஒழுங்கு சீராகி விடுமா.
நீங்கள் சொல்லுங்கள் இந்தியா உண்மையிலே ஜனநாயக நாடா? புலிகளுக்கு சர்வதேச நாடுகள் தடை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் தலைவுருடைய பிறந்த நாளும். மாவீரர் நாளும். மிக எழுச்சியாக கொண்டாட படுகிறது. இதற்கு அங்கே தடைகள் இல்லை அந்த நாடு அனுமதிக்கிறது. ஏன்? அந்த நாடுகள் கருத்து சுதந்திரம் உள்ள நாடுகள். ஜனநாயக நாடுகள். இந்தியா கருத்து சுதந்திரம் அற்ற ஒரு சர்வாதிகார நாடு. இதுதான் இந்திய இறையாண்மையா? இதுதான் ஜனநாயகமா?
இந்த இந்திய மண்ணில் பிறந்த ஒரு தமிழன். நான் ஒரு தமிழன் என்று சொல்வது, தேச துரோக குற்றம் என்று சொல்வது. இதை விட கொடுமை என்ன இருக்கு. கேவலமா இல்லையா நீ இந்தியன் என்று சொல்வது. தூ, தூ, தூ .. இதெல்லாம் ஒரு நாடு
என் அன்பு சொந்தங்கள் ஒன்றை புறிந்து கொள்ளுங்கள்.
நாம் பேசி போராடுவோம். இப்ப நாங்க பேசுறதுக்கே போராடுறோம். இதுதான் பிரச்சனை இப்ப.
தமிழனை அடக்கி ஆளும் வர்க்கமே, நீங்கள் ஒன்றை புறிந்து கொள்ள வேண்டும், உங்களுடைய சட்டத்தால் எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை தடுக்கலாம். எங்களின் பேச்சுக்களை தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வுகளையும், கனவுகளையும், எந்த சட்டத்தாலும்,
தடுக்க முடியாது.
நீங்கள்ஆற்று தண்ணியை அணை கட்டி தடுக்கின்ரீர்கள். அந்த நீரை நீங்கள் ஓரளவுதான் அணைகட்டி தடுக்க முடியும். அந்த ஆற்று நீர் ஒருநாள் அனைத்து தடைகளையும் உடைத்து விட்டு வீறு கொண்டு எழும். அப்போது உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது. தமிழனுடைய உரிமையும் சுதந்திர்த்தையும் இப்படிதான் சட்டம்போட்டு தடுக்கிரீர்கள். ஒரு நாள் இந்த ஆற்று நீரை போல் தமிழனும் வீறு கொண்டு எழுவான் இதுதான் வரலாறு. என் உரிமையையும் என் உணர்வையும் மதிக்காத தேசம் எனக்கு எதிரிதான்.
No comments:
Post a Comment