கேரளாவைக் கண்டித்து “அய்யப்ப மாலையை கழற்றும் போராட்டம்”
இன்று காலை 11.00 மணியளவில் தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரள அரசைக் கண்டித்து “அய்யப்ப மாலையை கழற்றும் போராட்டம்” எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் 75 பேர் கலந்து கொண்டு கேரள அரசுக்கு எதிராக முழங்கினர்.
தங்கள் கழுத்தில் இருந்த மாலைகளை அனைத்து தோழர்களும் கழற்றிவிட்டு தாங்கள் சபரிமலை போகமாட்டோம் என்றும் அறிவித்தனர். எழுச்சியுடன் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழர் எழுச்சி இயக்கத் தோழர்கள் 40 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போராட்டத்திற்கு பொதுமக்கள் பெருமளவில் ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ப. வேலுமணி
தமிழர் எழுச்சி இயக்கம்
9710854760
No comments:
Post a Comment