"வணக்கம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம் என்பார்கள்.
சில நாட்களாக இந்தப் பனிப்போரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு பூனைகளும் குரங்கும் அப்பம் பிரித்த கதை தெரியும்தானே!
தேசியவாதிகள் ஆளுக்கு ஆள் மோதிக் கொள்வதால் எதிரிக்குத்தான் இலாபம். தேசியத்துக்குக் கடும் இழப்பு.
டக்லஸ் தேவானந்தா மீது யாரும் கல் எறிவது இல்லை. அதனால் அவர் தப்பிக் கொள்கிறார்.
அதையிட்டு அவரோடு யாரும் சண்டைக்குப் போனதாகத் தெரியவில்லை.
பழைய அரசியலை எடுத்துக் கொண்டாலும் தமிழர்கள் கன்னைகளாகப் பிரிந்து தமக்குள் முரண்பட்டு மோதிக் கொண்டதால்
பல வாய்ப்புக்கள் நழுவிப் போயின.
- திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக் கழகம் என்று தமிழரசுக் கட்சி கேட்க யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக் கழகம் என ஜி.ஜி. பொன்னம்பலம் போட்டிபோட டட்லி சேனநாயக்கா இரண்டு பேருக்கும் பெப்பே காட்டிவிட்டார்.
- எமது இனம் அங்கே அழிந்து கொண்டிருக்கிறது. 280,000 மக்கள் தங்கள் வீடுவாசல்களை இழந்து தவிக்கிறார்கள்.
- முன்னாள் போராளிகள் ஏதிலிகள் போல் வாழ்கிறார்கள். போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் சென்ற பின்னரும் அரசியல் கைதிகள் சிங்களச் சிறைச்சாலைகளில் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
- எங்கே மாவீர்ர் நாளைக் கொண்டாடி விடுவார்களோ என்ற பயத்தில் அனுராதபுர சிறைச்சாலைக் கைதிகள் சிங்கள சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டுள்ளார்கள். கல்கலைக் கழக மாணவன் வெள்ளைவானில் கடத்தப்படுகிறான்.
- யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்படவர் கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்படுகிறார்.
இவற்றை எல்லாம் நாங்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
எமக்குள் சண்டை போடுவதை நிறுத்தி கீழ்க்கண்ட காரியங்கள் பற்றித் தீவிர கவனம் செலுத்தினால் நல்லது.
1) கற்றபாடங்கள் நல்லிணக்க அறிக்கையை ஆராய்ந்து அதில் காணப்படும் குறைபாடுகளை அனைத்துலகத்துக்குச் சுட்டிக் காட்டவேண்டும்.
2) போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிய சுதந்திரமான பன்னாட்டு விசாரணையை கோரவேண்டும்.
3) இன்று எமது தாயகத்தில் இனச் சுத்திகரிப்பு நடப்பதை சான்றுகளோடு எண்பிக்க வேண்டும்.
4) மேலே சொன்ன (3) இன் அடிப்படையில் தமிழினத்தின் தன்னாட்சி உரிமை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பன்னாட்டு சமூகத்தைக் கேட்கவேண்டும்.
5) வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் எமது மக்களுக்கு சிறிதளவேனும் பொருள் உதவி செய்ய வேண்டும்.
6) அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.
7) நாட்டில் ததேகூ யும் புலத்தில் நா.க.த. அரசையும் பலப்படுத்த வேண்டும்".
Let us ponder on these items described by this Tamil Intellect. Thank You. British Tamil Forum is the country wise organization to bring together all Tamils from the grassroots' level, Like wise similar organizations in other fifteen countries to function as cog wheel that is essential to move the larger cogwheel 'globalised cogwheel' the Global Tamil Forum. Transnational Government of Tamil Eelam and TNA Tamil National Alliance are the two wheels of the Bicycle propelled by the cogwheels and the chain which is the Tamil Diaspora.
Let us all work together to achieve our goal.
Season's Greetings. Let the New Year Bring all of good luck for a brighter future.
No comments:
Post a Comment