Translate

Friday, 20 January 2012

13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வினைஅமுல்படுத்தினால் தெரிவுக்குழுவில்


13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தினால் தெரிவுக்குழுவில்
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வுயோசனைகளை அமுல்படுத்தினால் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்போம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
 
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்திய வெளிவிவகாரஅமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தம்மை வற்புறுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புபாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாடுகுறித்து இந்தியா திருப்தி வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தைஅடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து தீர்மானிக்கப்படும்என அவர் தெரிவித்துள்ளார்.
 
நியாயமான இணக்கப்பாடு ஒன்றை எட்டும் வரையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment