வட மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தீர்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்இ அரசுக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடரும் நிலையில் இந்த தேர்தலை நடத்த வேண்டும் என கருதுகின்றீர்களா?
மாகாணசபை முறைமையும்இ 13 ம் திருத்தமும் இன பிரச்சினைக்கு தீர்வு அல்ல. இதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கின்றோம்.
கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களின் கரங்களில் இருந்து படிப்படியாக கை நழுவி போய் கொண்டு இருக்கின்றது. வடமாகாணத்திலும் இன்று இராணுவமயமாக்கல்இ குடிசனபரம்பலை மாற்றுவது ஆகிய திட்டமிட்ட செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உலகின் பார்வை இலங்கையின் பக்கம் இருக்கும் இன்றைய நிலைமைஇ எமது பிரச்சினை உலகில் பேசப்படும் பொருளாக இருப்பது ஆகியவை எதுவரை தொடரும் என்று அறுதியிட்டு கூற முடியாது. இன்றைய நிலையில் வடமாகாணசபை என்பது உருவாகுமானால் அது ஒன்றே தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஆளப்பட கூடிய ஒரேயொரு மக்கள் பிரதிநிதிகள் சபையாக இருக்கப்போகின்றது. அது தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் சபை என்ற ஒரு ஏற்புடைமை கொண்ட ஒரு அரங்கமாக தேசியஇ சர்வதேசிய தளத்தில் அங்கீகாரம் பெரும் வாய்ப்பு இருக்கின்றது. அந்த அரசியல் அரங்கம் ஆளுமையுடன் பயன்படுத்தப்படுமானால் இன்றைய நிலைமையில் இருந்து முன்னோக்கி நகர வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றேன்.
சமீபத்தில் என்னை சந்தித்தித்த தமிழ் சிவில் சமூக பிரதிநிதியிடமும் இதை நான் கூறி இருந்தேன். விரைவில் மேலும் சந்தித்து பேச உள்ளேன்.
கூட்டமைப்பிற்கும்இ அரசாங்கத்திற்கும் சந்திப்புகள்தான் நடைபெறுகின்றன. பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றனவா? அரசாங்கம் பேச்சுவார்த்தையை நேர்மையுடன் முன்னெடுக்கவில்லை என்பதுதான் தெரிகிறதே. வட-கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் வடமாகாணசபை தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு தமிழ் சிவில் சமூகத்துடன் கலந்துரையாடி ஒரு பொது நிலைப்பாடு எடுக்கவேண்டும்.
2. அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்துக்கு மேலாகச் சென்று அதிகாரப்பரவலாக்கலை வழங்கத்தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருக்கின்றார். இவ்விடயத்தில் அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படும் என நம்புகின்றீர்களா?
அயல்நாட்டு அமைச்சர் கிருஷ்ணா ஜனாதிபதி சொன்னதாக சொல்கிறார். ஆனால் உள்நாட்டில் ஜனாதிபதியின் அமைச்சர் ரம்புக்வல வேறு அர்த்தம் கூறுகிறாரே! 13 க்கு அப்பால் என்றால் செனட்சபை அல்லது மேலவை என்றுதான் அர்த்தம் என்று நம்நாட்டு அமைச்சர் கூறுகிறார். போலிஸ்இ காணி தொடர்பில் தமது நிலைபாடுகள் மாறவில்லை எனவும் கூறுகிறார்.
3. பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழு தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகக்கூடிய அதிகாரப்பரவலாக்கல் திட்டம் ஒன்றை முன்வைக்கும் என நம்பமுடியுமா?
ஜனாதிபதி என்னிடம் தொலைபேசியில் என் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு அவசரஇ அவசரமாக உங்கள் கூட்டமைப்பு நண்பர்களிடம் தெரிவுக்குழுவில் பங்குபெறுமாறு கூறுங்கள் என்று சொன்னார். அரசாங்கத்திற்கு இன்று இந்த பாராளுமன்ற தேர்வுக்குழு செயல்பாடு சர்வதேசத்தை சமாளிக்க தேவைப்படுகிறது. சில சர்வதேச சக்திகளுக்கும் இத்தகைய ஒரு நடைமுறை இலங்கையில் தேவைபடுகிறது.
4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் பங்குகொள்வது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?
தெரிவுக்குழுவில் இடம் பெறுவதற்கான வேளை இன்னும் வரவில்லை என்பது எங்கள் கருத்து. அதனால்தான் ஜனாதிபதி என்னிடம் சொன்னதைகூட நான் கூட்டமைப்பு தலைவர்களுக்கு சொல்லவில்லை.
அரசாங்கத்துடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை என்ற பெயரில் வெறும் சந்திப்புகளையாவது நடத்திவருவது சரியானது. அதேபோல் தெரிவுக்குழுவில் இடம் பெறாமல் விலகி இருப்பதும் சரியானது.
கடந்த காலங்களில் புலிகள் பேச்சுவார்த்தைகளில் அக்கறை காட்டாமல் பிடிவாதம் பிடித்தார்கள் என்று இலங்கை அரசாங்கம் உலகம் முழுக்க சென்று பிரச்சாரம் செய்தது. உலகம் அதை ஏற்றும் கொண்டது. எனவே இன்று அதுமாதிரியான ஒரு பெயரை கூட்டமைப்பு வாங்ககூடாது. எனவே அரசு எத்தனைதான் அவமானப்படுத்தினாலும் ஒரு கட்டம் வரை பேச்சுவார்த்தையில் தொடந்து இடம் பெறுவது சாதகமான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும். அதை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் சரியாக செய்கிறார் என நினைக்கிறேன்.
ஆனால் தெரிவுக்குழு என்பது வேறு. அதில் பல கட்சிகள் இருக்கப்போகிறார்கள். அதில் பங்குபற்றுவதற்கு முன்னர் அடிப்படை கொள்கைகளில் உடன்பாடு ஏற்பட வேண்டும். அடிப்படை நிலைபாடுகளில் உடன்பாடு ஏற்படாமல் தெரிவுக்குழுவில் இடம் பெறுவது பாதகமானது.
5. கூட்டமைப்புடனான உங்கள் உறவு எப்படி இருக்கின்றது?
வட-கிழக்கில் கூட்டமைப்புஇ மேற்கில் நாம் என்ற ஒரு பரஸ்பர புரிந்துணர்வுடன் அவர்களுடன் கூட்டு செயல்பாட்டிற்கு நாம் தயார். இந்த அடிப்படையிலேயே நான் வட மாகாண உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டமைப்பிற்கு ஆதரவாக சென்று கலந்து கொண்டேன். ஆனால் கூட்டமைப்பு எமக்கு முழுமையான ஆதரவுகளை கடந்த கொழும்பு தேர்தலின் போது வழங்கவில்லை என்பதுதான் உண்மை. எமது நிலைப்பாடுகளை சொல்லும் ஆதரவு சமிக்ஞைகளை பலமுறை காட்டி இன்று நாம் களைத்துவிட்டோம். தற்சமயம் கூட்டமைப்பு கட்சியானஇ தமிழரசு கட்சி கொழும்பில் கிளை அமைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நாட்டில் எந்த ஒரு இடத்திலும் கிளைகள் அமைக்க அவர்களது கட்சிஇ நமது கட்சி ஆகிய எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முழுமையான உரிமை இருக்கின்றது. அதை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் அலுவலகம் அமைப்பது என்பது வேறு. கிளை என்பது வேறு. இதன் அரசியல் அர்த்தம் என்ன என்பது அவர்களுக்கும் தெரியும். எமக்கும் தெரியும். எனவே வட-கிழக்கில் கூட்டமைப்புஇ மேற்கில் நாம் என்ற கூட்டு செயல்பாட்டிற்கு அவர்கள் தயார் இல்லை என தெரிகிறது. எனவே கூட்டமைப்பு தொடர்பிலான எமது கொள்கைகளை நாம் மீள்பரிசீலனை செய்வோம். கொழும்பில் அனைத்து பிரிவு தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை நாம் நினைவில் இருத்த வேண்டும். எல்லா தரப்பு தமிழ் மக்களையும் தலைநகர் தமிழர் என்ற அடிப்படையில் நாம் ஒன்று திரட்டி வைத்துள்ளோம். ஜனநாயக மக்கள் முன்னணி அனைத்து பிரிவு தமிழ் மக்களினதும் கட்சி. தமிழ் தேசிய கட்சி. அதேவேளையில் கொழும்பின் கள நிலைமைகளுக்கு ஏற்பட வியூகம் அமைத்து நாம் செயல்படுகிறோம். தலைநகர தமிழர்களுக்கு துன்பம் வந்த போதெல்லாம் நாம்தான் துணை இருந்ததுள்ளோம். எமது போராட்டங்கள் வட-கிழக்கிற்கும் சேர்த்து வலிமை சேர்த்தன என்பது சமகால வரலாறு சொல்லும் உண்மை. எனவே இங்கு தமிழர்களை கொழும்பு தமிழர்கள்இ மலையக தமிழர்கள்இ வட மாகாண தமிழர்கள்இ கிழக்கு மாகாண தமிழர்கள் என கூறு போட எவருக்கும் நாம் இடம் தர மாட்டோம். அத்தகைய பிரிவு வந்துவிட்டால் அது நம் அனைவருக்கும் அழிவை தேடி தரும்.
6. கடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிகளிடையே கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் அவ்வாறான அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதற்குக் கூட எதிரணிகளை ஒற்றுமைப்படுத்த முடியாத ஒரு நிலை காணப்படுகின்றதா?
பிரதான எதிர்கட்சியில் நிலவும் பிளவு எதிர்கட்சிகளின் ஒட்டு மொத்த கூட்டு செயல்பாட்டை பாதித்து விட்டுள்ளது.
எதிர்கட்சிகளை கடந்த காலத்தில் சரத் பொன்சேகா ஒரு மைய புள்ளியாக இருந்து ஒன்று சேர்த்தார். இன்று அத்தகைய ஒரு மையப்புள்ளி கிடையாது. அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்து விட்டது. ஆனால் ஜனாதிபதி சிங்கள மக்கள் மத்தியில் இன்னமும் செல்வாக்கு கொண்டவராக இருக்கிறார். சிங்கள மக்கள் அரசாங்கத்தையும்இ ஜனாதிபதியையும் பிரித்து பார்க்க பழகிகொண்டுள்ளார்கள். இதுதான் உண்மை.
எனவேதான் ஜனாதிபதியை எதிர்கொள்ள ஒரு மையப்புள்ளி தேவைபடுகிறது. எங்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால் நாங்கள் தமிழர்கள். ஒரு சிங்கள பௌத்த தலைவர் வேண்டும். அதுவரை தென்னிலங்கையில் ஒரு மாற்றம் வர தாமதமாகும். வரலாறு ஒருவரை உருவாக்கும்.
7. ஐ.தே.க.வுடனான உங்களுடைய உறவுகள் எவ்வாறானதாக உள்ளது?
இன்று ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே ஒரு மாநகரசபையை நாம்தான் தோள் கொடுத்து காத்து வருகிறோம். அவர்கள் எம்முடன் ஏற்படுத்திகொண்ட புரிந்துணர்வை கடந்த பாராளுமன்ற தேர்தலின் பிறகு நடைமுறைபடுத்தாமல் நேர்மை அற்ற முறையில் நடந்துகொண்டார்கள். அதேபோல் கடந்த கொழும்பு மாநகரசபை தேர்தலின்போது எமக்கு எதிராக பொய் பிரச்சாரங்களை செய்தார்கள். இன்றைய அரசாங்கத்துடன் எம்மை தொடர்புபடுத்தி பேசினார்கள். தேர்தலுக்கு பிறகு அரசாங்கத்துடன் நாம் இணைய போகிறோம் என சொன்னார்கள்.
இன்று எல்லாம் பொய்த்துவிட்டது. என்னைப்பற்றியும்இ எமது கட்சியை பற்றியும் ஊடகங்களில் அறிக்கை விட்டவர்களை இன்று காணோம். எமது ஆதரவு தேவை என ஐதேக தலைவர் எனக்கு கடிதம் எழுதவேண்டிய நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. நாம் பெருந்தன்மையுடன் இன்று புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் கொழும்பு மாநகரசபை நிர்வாகத்திற்கு ஆதரவு வழங்குகின்றோம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
முதல் காரணம்இ ஐதேக ஆட்சியை கவிழ்த்தால் அது மத்திய அரசாங்கத்திற்கு வாய்ப்பாகிவிடும். அதை நாம் செய்யமாட்டோம். அதை வியாழக்கிழமை நடைபெற்ற மாநகரசபை நிதிக்குழு தெரிவில் ஐதேக மாநகரசபை உறுப்பினர்கள்தான் செய்தார்கள். அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஏழு ஐக்கிய தேசிய கட்சி மாநகரசபை உறுப்பினர்களின் பெயர்களும் தற்போது கண்டு பிடிக்கப்பட்டு வெளியாகி உள்ளன.
அடுத்த காரணம்இ கொழும்பு மாநகரசபை முதல்வர் முசம்மில் எனது நண்பர். அவர் ஒரு சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர். அவருக்கு என்மீது நம்பிக்கை இருக்கிறது. அவரும் எனக்கு நம்பிக்கையுடன் செயல்படுவார் என நம்புகிறேன். அவரது நிர்வாகம் தொடர நாம் ஆதரவு வழங்குகின்றோம்.
8. கொழும்பு மாநகரசபையில் உங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளீர்கள். உங்கள் ராஜினாமாவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஒரு சிங்கள பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவைபற்றி தெளிவு படுத்த முடியுமா?

முதலில் என் ராஜினாமா. கொழும்பு நகரில் வாக்களிப்பில் கலந்துகொண்டதே சுமார் 45 இ000 தமிழ் வாக்காளர்கள்தான். ஏனையோர் வாக்களிக்க வீட்டைவிட்டு வெளியே வரவே இல்லை. இதில் சுமார் 30 இ000 தமிழ் வாக்காளர்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். கொழும்பு நகரில் இருக்கும் சுமார் 100இ000 (ஒரு லட்சம்) தமிழ் வாக்காளர்களும் வாக்களித்திருந்தால் நான் மேயராகி இருப்பேன். இந்நிலையில் ஒரு மாநகரசபை உறுப்பினராக முழு நேர வேலையை கட்சி தலைவரான நான் செய்யமுடியாது என்றும்இ கட்சி தலைவர் பணியை தேசிய தேசிய தளத்தில் இருந்து நான் ஆற்ற வேண்டும் எனவும் கட்சின் அரசியல் குழு முடிவு எடுத்துள்ளது.
அடுத்தது எனது வெற்றிடம். சகோதரி பிரியாணி குணரத்ன எமது கட்சிக்கு புதியவர் அல்ல. 2006 ம் ஆண்டில் நானும்இ நண்பர் ரவிராஜும் மக்கள் கண்காணிப்பு குழுவை அமைத்த காலத்தில் இருந்து அவர் மக்கள் கண்காணிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார். எமது மனித உரிமை போராட்டங்களில் எல்லாம் பெறும் பங்காற்றிய ஒரு சிங்கள் முற்போக்காளர். அத்துடன் நமது கட்சியின் நிர்வாக செயலாளராக 2008ம் வருடத்தில் இருந்து செயல்படுகிறார். அவர்தான் இன்று ஒரு வருட காலத்திற்கு நியமனம் பெற்றுள்ளார்.
கொழும்பு மாநகரசபை என்பது யாழ் அல்லது மட்டக்களப்பு மாநகரசபை அல்ல. இங்கே மாநகர நிர்வாக இயந்திரத்தில் முழுமையாக பெரும்பான்மை இன அலுவலர்களே செயல்படுகிறார்கள். ஒரு சில முஸ்லிம் அதிகாரிகளை தவிர சாக்கடைஇ வீதி திருத்தம்இ குப்பைகள் அகற்றல்இ வீதி விளக்குகள் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளிலும் தலைமை பொறியியலாளர்களாகவும்இ உதவி பொறியியலாளர்களாகவும்இ சிற்றூழியர்களாகவும் பெரும்பான்மை இனத்தவர்களே கடமை ஆற்றுகின்றார்கள். இந்நிலையில் எமது மாநகரசபை கட்சி குழுத்தலைவர் கங்கை வேணியன் தலைமையிலான எமது மாநகரசபை உறுப்பினர்களுக்கும்இ மாநகரசபை இயந்திரத்திற்கும் இடையில் ஒருங்கினைப்பாளராக செயற்பட்டு எமது வாக்காளர்களுக்கு உரிய சேவைகளை பெற்றுக்கொடுக்க ஒரு சிங்கள பெண்மணி பொருத்தமானவர் என எமது கட்சின் அரசியல் குழு ஏகமனதாக முடிவுசெய்துள்ளது.
No comments:
Post a Comment