Translate

Wednesday, 25 January 2012

தென்மராட்சியில் காணாமல் போன இளம்பெண் கேரதீவு இராணுவ காவல்அரண் அருகில் எலும்பு கூடாக மீட்பு!

தென்மராட்சியின் மறவன்புலோ- தனங்களப்பு பகுதியில் கடந்த நவம்பர் மாதமளவில் காணாமல் போயிருந்த இளம் பெண் ஒருவர் கேரதீவு பகுதியில் இராணுவ காவல்அரண் ஒன்றிற்கு அருகில் எலும்பு கூடாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.  28 வயதுடைய சுபபிரமணியம் அற்புதமலர் என்பவர் கடந்த நவம்பர் 13ம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்ற வேளை காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்திலும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளையும் செய்திருந்தனர்.
அண்மையில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அறுகுவெளி-கேரதீவு பகுதியில் வேட்டைக்கு சென்ற சிலர் கைவிடப்பட்ட இராணுவ மண் அணை ஒன்றிற்கு அருகில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு கூட்டுத்தொகுதிகளை இன்று காலை கண்டுள்ளனர்.
இதனையடுத்து சாவகச்சேரி நீதிவான் மற்றும் சட்டவைத்திய அதிகாரி ஆகியோர் விசாரணைகளை  மேற்கொண்டனர். அவ்வேளையிலேயே காணாமல் போயிருந்த யுவதி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளை வைத்து குடும்பத்தவர்கள் சடலத்தை அடையாளங்காட்டியுள்ளனர்.
மீடக்கப்பட்ட சடலம் நீதிபதியின் உத்தரவு பிரகாரம் யாழ்.போதனா வைத்திய சாலையின் பிரேத அறையில் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment