ஐ.தே.கட்சி சுட்டிக்காட்டு
13ஆம் திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துவதில் அரசாங்கத்திற்கு நாட்டம் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எதுவித அர்த்தமும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பில் உரிய திட்டமொன்றை முன் வைப்பதே சாலச் சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் நடவடிக்கையில் பூரண ஒத்துழைப்பு வழங் கவும் யோசனைத் திட்டங்களை பரிந்துரை செய்யவும் ஐக்கிய தேசியக் கட்சி தயார் நிலையில் இருக்கின்றது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் 13ஆம் திருத்தச் சட்டமூலத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் விரும்பினால் இந் த சட்டமூலத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் நிலைமை இருக்காது. அர சியல் ரீதியான தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதில் அரசாங்கத்திற்கு நாட்டம் கிடையாது என்பதே தற் போதைய மிகப் பெரிய பிரச்சினை.
அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளில் பயன் கிட்டுமா என் பதில் சந்தேகம் நிலவுகின்றது. பாராளுமன்றத் தெரிவுக்குழு சர்வகட்சிப் பேரவையைப் போன்றதொன்று. எனவே சர்வகட்சிக் குழுவின் நிலைமையே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஏற்படும். சர்வகட்சிப் பேரவையால் முன்மொழியப்பட்ட யோசனைத் திட்டங்களை அரசாங்கம் குப்பைக் கூடை யில் வீசி எறிந்ததாக திஸ்ஸ அத்த நாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment