Translate

Thursday, 26 January 2012

போரைத் தவிர ஏனைய விடயங்களில் அரசாங்கம் தோல்வி: கரு ஜயசூரிய


போர் தவிர்ந்த ஏனைய சகல அம்சங்களிலும் அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கப்பம் கோரல்,  ஊழல் மோசடிகள் நாட்டில் வெகுவாக உயர்வடைந்துள்ளன.  போரை வென்றெடுத்த கௌரவம் இந்த அரசாங்கத்தைச் சாரும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
எனினும், போரின் போது கூடுதல் அர்ப்பணிப்புகளைச் செய்த சரத் பொன்சேகா இன்று சிறையில் வாடுகின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்,  ஐக்கிய தேசியக் கட்சியை குழப்பும் நோக்கம் தமக்கில்லை எனவும் நாட்டு மக்களின் தேவைகளுக்காக என்றும் குரல் கொடுத்தோம் என்றும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment