தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையை விட நெடுந்தீவிலேயே விகிதாசாரப்படி கூடிய அளவிலான வாக்குகள் கிடைத்தன. அந்த நன்றிக் கடனுக்காக நெடுந்தீவினைக் குட்டிச் சிங்கப்பூர் ஆக்கப்போகின்றாராம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச.
யாழ்.மாவட்டத்தில் தனித்த விடப்பட்ட ஒரு தீவான நெடுந்தீவில் இருந்து தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் தனக்கு வாக்குகளை வழங்கியுள்ள மக்களுக்கு அதன் நன்றிக் கடனை செய்யப்போகிறாராம் ஜனாதிபதி.
அதற்காக நெடுந்தீவில் ஜந்து நட்சத்திர விடுதியொன்றினை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாதம் யாழ்.குடாவிற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்விடுதிக்கான அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் சீன அரசின் நிதியுதவியுடன் அங்குள்ள வீதிகளை கார்ப்பெட் வீதிகளாக மாற்றி நெடுந்தீவினை குட்டிச் சிங்கப்பூராக்கப் போவதாகவும் கூறிவருகின்றார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சொந்த ஊரான அம்பாந்தோட்டையை விட நெடுந்தீவிலேயே விகிதாசாரப்படி கூடிய அளவிலான வாக்குகள் கிடைத்துள்ளன.
இதைவிட தனக்கு கிடைத்த தமிழ் மக்களது வாக்குகளின் விகிதாசாரப்படியும் நெடுந்தீவிலேயே கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி அடிக்கடி கூறிவருகின்றார்.
ஜனாதிபதியின் இந்தத்த திட்டங்களை அடுத்து தெற்கில் இருந்து வடக்கு வரும் அமைச்சர்கள் பலரும் தமது யாழ்ப்பாண விஜய நிகழ்ச்சி நிரலில் நெடுந்தீவுப் பயணத்தையும் உள்ளடக்கி வருகின்றனர்.
தென்பகுதி அமைச்சர்கள் என யாருமே சென்றிராத இப் பிரதேசத்திற்கு அண்மையில் உயர் கல்வி அமைச்சர் குழாம் சென்றிருந்தது.
இனிவரும் காலங்களில் மேலும் பலர் இவ்விடத்திற்கு விஜயம் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை தயார்ப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடல்வழிப் பயணங்களையும், சீரற்ற படகுச் சேவைகளையும், மணல் பாதைகளையும், பொருளாதார ரீதியில் குறைந்த வருமானத்தையும் கொண்டு இன்றுவரை அபிவிருத்தியில் குறைந்த தனித்துவிடப்பட்ட ஒரு தீவாகவே நெடுந்தீவு இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment