Translate

Sunday, 22 January 2012

மொழிப்பெயர்ப்பாளர் பா.சத்தியசீலன் இனந்தெரியாதோரால் கடத்தல்

நாடாளுமன்றம், கொழும்பு மாநகரபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொழிப் பெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் (வயது 34) என்பவர், இனந்தெரியாதோர் சிலரால் திருகோணமலையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என்று திருகோணமலை, துறைமுகப் பொலிஸில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த கடத்தல் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சத்தியசீலனின் மனைவியின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு, ஒபேசேகரபுரத்தைச் சேர்ந்த சத்தியசீலன், விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.

திருகோணமலை, நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள மனைவியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது சந்தியொன்றில் வைத்து தன்னை சிலர் கடத்தியதாக நேற்று காலை 5.15 மணியளவில் அவர் தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

இருப்பினும் அந்த அழைப்பை அடுத்து கணவரின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சத்தியசீலனின் மனைவியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் சத்தியசீலன் எந்த சந்திப் பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியாதுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.tamilmirr...2-04-34-33.html 

No comments:

Post a Comment