அரசாங்கத்தின் உத்தேச செனட் சபையில் புத்திஜீவிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டமைப்பை அவ்வாறே பேணும் அதேவேளை, புத்திஜீவிகளை உள்ளடக்கி செனட் சபை அமைக்கப்படும் என அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், செனட் சபை குறித்து நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் பேச்சுவார்த்தைகளின் இறுதியில் செனட் சபை அமைப்பது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment