அரசியல் அமைப்புக்கான 13-வது திருத்தச்சட்டம் இந்தியாவினால் எம்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்ட ஒன்றாகும். இதற்கு மக்களுடைய ஆதரவும் இல்லை.
இந்தியாவின் தேவைகளுக்காக இதனை நடைமுறைப்படுத்தவோ, காணி,பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்கவோ முடியாது என ஜாதிக ல உறுமய உறுதியாகக் கூறியிருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமாக பேசுவதால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. சிங்களவர்களின் ஆதரவு இல்லாமல் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது. எனவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாகவே பிரச்சினைகள் ஆராயப்பட வேண்டும் எனவும் ஜாதிக யஹல உறு மயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன் பில தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 1956-ம் ஆண்டு முதல் தமிழ்த் தலைவர்கள் அரச தலை வர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுடன் பல்வேறு உடன்படிக்கை களையும் செய்து கொண்டார்கள். இருந்த போதிலும் எதுவுமே பலனளிக்கவில்லை. சிங்கள எதிர்ப்பு காரணமாகவே அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. அதனால் அரசாங்கத்துடன் அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் மட்டும் திருட்டுத்தனமாக பேச்சுக் களை நடத்துவதால் பலன்கிடைக்கப் போவதில்லை.
இதனால் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளு மன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான பேச்சுக்களின் போது தனிஈழம் தொடர்பாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினர் கருத்துக்களை வெளியிடலாம். இவ்வாறு பேச்சுக்களை நடத்துவதே பலன் அளிப்பதாக அமையும் என்பதுடன், அதன் மூலமாகவே தீர்வைக் காணவும் முடியும். சிங்கள எதிர்ப்பை மீறி எதனையும் செய்ய முடியாது.
13வது திருத்தச் சட்டத்தை பொறுத்த வரையில் அது இந்தியாவினால் எம்மீது திணிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்கு மக்களுடைய ஆதரவு கிடையாது. எனவே அதனை நடைமுறை ப்படுத்தக்கூடாது. இத் திருத்தம் தொடர்பில் நாடாளு மன்றத் தெரிவுக் குழுவில் விரிவான முறையில் ஆராயப்பட வேண்டும். அத்தோடு மக்களின் ஆதரவும் பெறப்பட வேண்டும். இந்தியாவின் தேவைகளுக்காக மட்டும் இதனை நடைமுறைப் படுத்த முடியாது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழ ங்கப்படக்கூடாது. இவ்வாறு கொடுக்க முற்பட்டால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம். இந்த விடயங்களில் இந்தியாவின் அழுத்தங்களைக் கவனத்தில் கொள்ள முடியாது எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நேற்று இலங்கைக்கு விஜயம் செய்த நிலையில், ஜாதிக யஹல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பில இவ்வாறு கூறியுள்ளார்.
valampurii.com

No comments:
Post a Comment