Translate

Wednesday, 4 January 2012

ஒரு பிக்கு தமிழ்மக்களிடம் திருடிய பொருட்களை இன்னுமொரு பிக்கு அவரிடம் இருந்து திருடினர்.

வன்னியை சிங்களப்படையினர் ஆக்கிரமித்து மூன்று வருடங்கள்தான் ஆகின்றது. மக்கள் இன்னமும் ஒழுங்காக குடியேறகூட அனுமதிக்கவில்லை. அதற்கிடையில் கொக்காவிலில் மகாபோதி விஹாரை மட்டும் பெரிதாக உருவெடுத்து வழிபாடுகள் நடக்கின்றன.
கூடவே அங்கு களவும் நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. கொக்காவிலில் மஹாபோதி விகாரையில் இருந்த பிக்கு இறந்துவிட்டாராம் அவரது மரண வீட்டிற்கு வந்த சிலாப பிக்குகள் இருவர் அங்கிருந்த பொருட்களைத் திருடிசென்று விட்டார்களாம். மக்களின் சொத்துக்களை திருடி அல்லது பறிமுதல் செய்து கொக்காவில் பிக்கு வைத்திருந்திருப்பார் அதனை தெற்கில் இருந்துவந்த பிக்குகள் கவர்ந்து சென்றிருக்கின்றார்கள். தமிழ் மக்களின் இடம், சொத்துக்கள் என்றால் இராணுவத்திற்கு மட்டுமல்ல பிக்குகளுக்கும் ஒரு வகை வெறிதான்.

No comments:

Post a Comment