நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நடைமுறைப் படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்க மான நண்பர்களிடம் கூறியுள்ளார். இத் தகவலை லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனவே சிங்கள, பெளத்த வாக்கு வங்கியை இழக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அத்துடன் இந்தியாவின் அழுத்தங்கள் இருந்தாலும் 13-வது அரசியல் அமைப்பு திருத்தத்தை அடுத்த ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.............. read more
No comments:
Post a Comment