Translate

Sunday 8 January 2012

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் விழாவை அரசாங்கம் பகிஷ்கரிப்பு; உலகத் தமிழர் பேரவை பங்குபற்றுவது காரணம்

 
ஆபிரிக்க தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவில் பங்குபற்றுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமைமேய இந்நிராகரிப்புக்கு காரணமாகும்.

தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழா இன்று அக்கட்சி ஸ்தாபிக்கப்பட்ட புளூம்பொன்டெய்ன் நகரில் நடைபெறுகிறது.  இவ்விழாவில் பங்குபற்றுமாறு சுமார் 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழர் பேரவைக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து அளித்துஅரசாங்கமொன்றின் தூதுக்குழுவுக்கு சமமாக நடத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.  வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இலங்கையின் சார்பில் இவ்விழாவில் பங்குபற்றுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் வண.பிதா. கலாநிதி எஸ்.ஜே.இமானுவல் தலைமையிலான தூதுக்குழுவினர் இவ்விழாவில் பங்குபற்றுவதற்காக ஏற்கெனவே தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளனர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், எம்.ஏ.சுமந்தினர், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பங்குபற்றுகின்றனர்.  

No comments:

Post a Comment