சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் ஒரு புதிய நீர்த்தேக்கத்தை உருவாக்க ரூ.330 கோடியை அனுமதித்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. சுமார் 1250 ஏக்கரில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படவுள்ள இந்த நீர்த்தேக்கம், சென்னை நகரின் குடிநீர்ப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான நடவடிக்கை.
ஒரு டிஎம்சி கொள்ளளவுத்திறன் கொண்ட இந்த நீர்த்தேக்கத்திற்காக அமைக்கப்படவுள்ள சுமார் 6.8 கிலோ மீட்டர் தொலைவு நீள மண்கரை, தமிழகத்தின் ஏரிக்கரைகளில் மிக நீண்டதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நீர்த்தேக்கம் மிக அவசியமானதும் காலத்தின் கட்டாயமும் ஆகும்.
சென்னையில் கடந்த சில மாதங்களில் பெய்த பலத்த மழையும், இதனால் சென்னை நகரம் பட்ட அவதியும் எல்லாரும் அறிந்தவை. கூவத்தையும் அடையாறையும் என்னதான் குப்பைகளைப் போட்டு அடைத்தாலும், எவ்வளவுதான் சாக்கடையைக் கொண்டுபோய்த் தள்ளினாலும், அவை தங்களை மக்களுக்கு உதவும் நதிகள் என்பதை எப்போதும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றன.
அண்மையில் பெய்த பலத்த மழைவெள்ளத்தை இந்த இரு நதிகளும் கடலில் கொண்டு சேர்த்தன. அதையும் மீறி, சேரிடம் இல்லாமல் சேறான மழைவெள்ளம் சென்னை புறநகரை பெரிதும் பாதித்தது. இப்போது உருவாக்கப்படும் புதிய ஏரி, மழைவெள்ளத்தையும் ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த புதிய நீர்த்தேக்கம் சென்னையின் குடிநீர் வசதிக்காக மட்டுமே ஏற்பட்டுள்ளது. சென்னை பெருநகரின் குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்துள்ள தமிழக முதல்வரின் நடவடிக்கை சரியானது என்றாலும், அவர் தமிழகத்தில் உள்ள பாசன ஏரிகளுக்கும் இதே முன்னுரிமையை அளிக்க வேண்டும்.
குடிநீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில், தமிழ்நாட்டின் பல்வேறு ஏரிகளில் நிலத்தடி நீர் செறிவூட்டுத் திட்டம் வகுத்து இதற்காக மொத்தம் ரூ.11.49 கோடி ஒதுக்கப்பட்டிருந்தாலும், இவையும் குடிநீரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமேயொழிய, பாசன மேம்பாட்டுக்கான திட்டம் அல்ல.
தேசிய ஏரிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மிகவும் மாசுபட்ட 62 ஏரிகளை மத்திய அரசு பட்டியலிட்டு, அவற்றின் மேம்பாட்டுக்கு மாநில, மத்திய அரசு இணைந்து நிதிப் பங்கீட்டுத் திட்டத்தில் புனரமைக்க திட்டங்கள் தீட்டியது. இந்த ஏரிகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை மனதில் கொண்டு முன்னுரிமை அளிக்கப்பட்டவை. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டின் உதகை ஏரியும், கொடைக்கானல் ஏரியும் உள்ளன.
குடிநீருக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் மட்டுமே ஏரிகளை மேம்படுத்துவதுபோல, பாசனத்துக்காகவும் ஏரிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் தமிழகத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக 33,000 ஏரிகள் உள்ளன. இவற்றில் குறிப்பிடத் தகுந்த சுமார் 5,200 ஏரிகள் தமிழக அரசின் பொதுப் பணித்துறையின் வசம் உள்ளன. இவற்றின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பயனடைகின்றன.
நதிகள் மற்றும் சிற்றோடைகள் மூலம் ஏரிக்கு வரும் நீர்ப்பாதைகள் அனைத்தும் தூர்ந்துபோயும், சில இடங்களில் ஆக்கிரமிப்புகளால் மறைந்து போயுமுள்ளன.
ஆக்கிரமிப்புகளைத் தயவுதாட்சண்யமின்றி அகற்றும் அதிரடி நடவடிக்கை என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே சாத்தியம். நீர் வரும் பாதைகளைத் தூர்வாரினால் மேற்சொன்ன 5,200 ஏரிகளில் பெரும்பாலானவை எப்போதும் நீர் நிரம்பியதாய் மாறிவிடும்.
ஏரிகள் தூர்ந்துபோக மிக முக்கியமான காரணம், இதனை உள்ளாட்சி அமைப்புகள் குப்பை கொட்டும் இடமாக மாற்றியதுதான் என்றால் மிகையில்லை. ஆறுகள் இல்லாத நகரங்களில் ஏரிகள் வெறும் சாக்கடை தேக்கப்படும் இடமாக மாறியுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட சாக்கடை நீரை மட்டுமே ஏரிகளில் கலக்க முடியும் என்ற நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
ஏரிகளில் ஊர்ச் சாக்கடை கலந்தாலும்கூட, ஏரி வற்றும்போது வண்டல் மண்ணை அள்ளிப்போய் தங்கள் நிலத்தில் போட்டு அதைச் செறிவூட்டவும், ஏரிக் களிமண்ணை எடுத்துப்போய் வீடுகட்டுதல் மற்றும் குயவுத் தொழிலுக்குப் பயன்படுத்தியதன் மூலமும் இயல்பாகவே ஏரித் தூர்வாரும் பணிகள் எந்த அரசின் ஆதரவும் இல்லாமல் சமூக சுழற்சியால் நடைபெற்றுக் கொண்டிருந்தன. விவசாயிகள் ரசாயன வேளாண்முறைக்கு மாறியதால், ஏரி வண்டல் மண், வீடுகளின் திறந்தவெளிக் கழிவறைக் குப்பைகளை நிலத்தில் போடும் வழக்கும் மறைந்தே போனது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்ததால், மண்பானைகள் மறைந்தன. குயவர்கள் ஏரிகளில் களிமண் அள்ளுவது குறைந்துபோனது. ஏரிகள் குப்பை கொட்டும் இடமாக மட்டுமே மாறிவிட்டன.
ஏரிப் புறம்போக்கு என்று கருதப்பட்ட இடங்களில் எல்லாம் இப்போது குடியிருப்புகள் உருவாகி விட்டிருக்கின்றன. விவசாயத்துக்கு ஏரிப் புறம்போக்குகள் பயன்படுத்தப்பட்டால் மீட்டெடுக்கலாம். குடியிருப்புகளை இடிக்கவா முடியும்? ஆக்கிரமிப்புகள் தயவுதாட்சண்யமே இல்லாமல் இடிக்கப்படும் என்கிற பயம் இருந்தால் மட்டுமே இந்தப் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
நகரின் விரிவாக்கம் காரணமாக ஏரிகள் மறைந்து, அந்த ஏரிகளின் மீது புதிய பேருந்து நிலையம், அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை, அரசு அலுவலகங்கள் உருவாகிவிட்டன என்றாலும், ஒரு மரத்தை வெட்டினால் இரண்டு மரக்கன்று நடுவதைப்போல, அதே உள்ளாட்சியில், தற்போது கும்மிடிப்பூண்டியில் நீர்த்தேக்கம் உருவாக்குவதைப்போல, ஒரு புதிய ஏரியை உருவாக்குவதைக் கட்டாயமாக்குதலும் அவசியம்.
கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களையும் நீதிமன்றங்களையும், மத்திய அரசையும் நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. நம் மாநிலத்தில் உள்ள ஏரிகளை நம்பி வாழ்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
ஏனையோர் தருவார் ஏமாற்றம் - எனினும் ஏரிகள் நம்மைக் காப்பாற்றும்.

No comments:
Post a Comment