தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களை மிகப்பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது - செ.கஜேந்திரன்.
கடந்த 60 வருடமாக தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை புரிந்த சிறிலங்கா அரசாங்கத்தினைக் காப்பாற்றும் நோக்கத்துடனே தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்பட்டுள்ளது இதனாலேயேஜெனீவா அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது கூட்டமைப்பு தமிழ்மக்களை மிகப்பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது என்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களை மிகப் பெரிய ஏமாற்றத்திற்குள் தள்ளியுள்ளது என்று தனது கவலையை வெளியிட்டுள்ளார்.எமது புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் போர்க்குற்றம் மற்றும் தமிழ்ர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அநீதிகள் தொடர்பான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்து அவ் விசாரனைக்கான காலத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளனர்.
இவர்களுடைய நிலைப்பாட்டிலேயே ஆரம்பத்தில் இருந்து தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் இருந்து வருகின்றது.ஆனால் ஜெனீவா செல்லவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை விடுத்துள்ள அறிக்ககை புலம்பெயர்ந்த தமிழ் உறவுகளின் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக செய்துவரும் போராட்டங்களையும் ஏனைய செயற்பாடுகளையும் கைவிட வேண்டும் என்ற தகவலையே செல்லி நிற்கின்றது. குறிப்பாக தற்போதைய நிலை தொடருமானால் வன்முறைக்கு வித்திடலாம், தமிழ் மக்கள் மீண்டும் பாதிக்கப்படலாம்என்று குறிப்பிட்டிருப்பதன் மூலமாக சர்வதேச சமூகத்திற்கே தனது செய்தியினை தமிழ் தேசியக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தமிழ் உறவுகள் சிறிலங்கா அராசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகளால் சிறிலங்காவில் உள்ள சிங்கள மக்கள் தமிழ் மக்கள் மீது கோவப்பட்டு மீண்டும்வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாலம் எனவே புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் சிறிலங்கா அரசுக்கு எதிராகசெய்யும் போர்க்குற்றத்தினை வலியுறுத்தும் செயற்பாடுகளை கைவிடவேண்டும் என்னும் அர்த்தத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அரசியல் தீர்வு என்பது எந்தளவுக்கு முக்கியமானதோ அதே போன்று சரிநிகர் சமமானதேவை தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பாகவிசாரனையும.; அவ் விசாரனையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும் தண்டனையும் மிக முக்கியமானது.தற்போது தமிழ் மக்கள் ஓரளவேனும் அமைதியாக இருப்பதற்கும் சிங்களவர்கள் தமிழர்கள் மீது வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதற்குக் முக்கியகாரணம் சர்வதேசத்தில் பேர்குற்றம் தொர்பாக நடைபெறும் விசாரனையின் வலியுறுத்தல்கள் உள்ளதனாலேயே. சர்வதேசம் சிறிலங்காவைக் கைவிட்டு போர்குற்ற விசாணையில் இருந்துசிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றப்பட்டால் மட்டுமே தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும்.
அவ்வாறு தண்டனை பெற்றுக் கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்கள் மீது கை வைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் அஞ்சும். எனவே நாம் இவ் விசாரணை விடையத்தில் பின்னிற்கக் கூடாது.தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ்; தேசியக் கூட்டமைப்பு சிறிலங்காஅரசாங்கத்தை பேற்க்குற்றத்தில் இருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுமானால் தமிழ்மக்கள் அனைவரும் தாமாகவே சென்று கடலுக்குள் விழும் நிலையே தோண்றும்.சர்வதேசம் தமிழருக்கான வரும் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் கைவிடக்கூடாது.ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பினையும் நிச்சையம் நிறைவேற்ற வேண்டும்.
மேற்படிஅமர்வுகளில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இன்னும் சந்தர்ப்பம் உள்ளது. தமிழ் மக்களைதொடர்ந்து ஏமாற்றத்திற்குள் தள்ள வேண்டாம் என்றும் செ.கஜேந்திரன் அவர்கள்; தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment