Translate

Saturday, 11 February 2012

இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்பு தொடர்கிறது – அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்


இலங்கையில் தொடர்ந்தும் திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது

கடந்த 4 ஆம் திகதியன்று தமிழ்க் காங்கிரஸ் நடத்திய இரவுப்போசன நிகழ்வில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதன்போது கருத்துரைத்த பலரும் 1948 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டனர்.
நிகழ்வின் போது வன்னியில் மருத்துவமனை ஒன்றின்மீது இலங்கைப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து இளம்பெண் ஒருவர் வீடியோ திரையை காண்பித்து விளக்கம் அளித்தார்.
இதேவேளை இலங்கையில் இருந்து வரும் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு எதிரான போக்கை கடைப்பிடிக்கவில்லை என்று அங்கு வந்திருந்தவர்கள் கருத்துரைத்தனர்.
அயர்லாந்தில் பிறந்தவரும் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்காக குரல் கொடுப்பவருமான பெற்றிக் மெக்கோரி இங்கு கருத்துரைக்கையில்,
அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உண்மையான அகதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
2009 ஆம் ஆண்டில் இலங்கையின் இறுதியுத்தம் முடிந்த பின்னர் அதில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment