Translate

Wednesday, 29 February 2012

இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை: ரொபேர்ட் ஓ பிளக்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில், ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்தும் ரொபேர்ட் ஓ பிளக் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள் நடத்தப்படாத நிலையில் சவேந்திரவை, ஆசிய பிராந்திய வலய பிரதிநிதியாக நியமித்தமை பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment