Translate

Wednesday, 29 February 2012

பிரித்தானியாவில் இருந்துசென்ற பெண் சடலமாக மீட்பு !

பிரித்தானியாவில் இருந்துசென்ற பெண் சடலமாக மீட்பு !
பிரித்தானியாவிலிருந்து இலங்கைகு வந்து கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள ரேனுகா ஹோட்டலில், தங்கிருந்த தமிழ்ப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 48 வயதுடைய கனகசபை சுதர்ஷினி கஹீலா என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹோட்டலின் முதலாம் மாடி அறையொன்றில் இந்தப் பெண் பிறிதொரு நபருடன் தங்கி வந்துள்ளார்.
கடந்த ஆறு தினங்களாக இவர்கள் தங்கியிருந்த அறை திறக்காமல் மூடிய படியே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமுற்ற ஹோட்டல் நிர்வாகம் நேற்று (28) குறித்த அறையைத் திறந்து பார்த்தபோது இந்தப் பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். இவருடன் தங்கியிருந்த நபா் தலைமறைவாகியுள்ளார்.

இவரின் உடலில் பல இடங்களிலும் கத்திக்குத்துக் காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னரே பித்தானியாவிலிருந்து இலங்கை வந்து கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டல் ரேனுகாவில் தங்கியிருந்தார் என மேலும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment