ஜெனிவா கூட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவசர அழைப்பு!
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டம் சம்பந்தமாக கலந்தாலோசிப்பதற்கான அவசர கூட்டம் ஒன்றிற்கு எதிர்வரும் 2ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாததையிட்டு புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும், தாயக தமிழர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தொடர்பாகவும் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் சம்பந்தமாகவும் கலந்தாலோசிப்பதற்கே மேற்படி கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ள இக் கூட்டத்தில் ஜெனிவா மனிதவுரிமைக் கூட்டத்தொடர் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment