Translate

Tuesday, 28 February 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் _


  இலங்கைக்கு எதிரான ஜெனீவாவின் தீர்மானங்களுக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் அமெரிக்காவை போன்று இந்தியா துரோகத்தனமாக செயற்படாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையரசு இடமளிக்காது. என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 


அரசாங்கத்தை பாதுகாக்க பொது மக்கள் நாடளாவிய ரீதியில் போராடி வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு கிடைத்த முதல் பதிலடி எனவே உள்நாட்டில் பொது மக்கள் பேதங்களை மறந்து அரசாங்கத்திற்கு ஆதரவாக போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில் :

ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமை பேரவையிள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வர அமெரிக்கா சூழ்ச்சி செய்து வருகின்றது. சர்வதேச விசாரணையொன்றை ஏற்படுத்தி உள்நாட்டில் போலி விசாரணைகளை மேற்கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்குவதே அமெரிக்காவின் திட்டமாகும். இதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இடம் கொடுக்காது.

இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட அமெரிக்காவிற்கு உரிமை கிடையாது. இந்தியா இலங்øக்கு ஆதரவாக செயற்பட உள்ளது. அமெரிக்காவின் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் இந்தியா இலங்கையை ஆதரிக்கின்றமையானது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் இதற்கு மேலும் வலு சேர்க்கும் முகமாக உள்நாட்டில் பல போராட்டங்கள் அரசாங்கத்தை ஆதரித்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச விசாரணையொன்றுக்கான சூழலுக்கு ஜெனீவா சென்றுள்ள இலங்கை தூதுக் குழு இடமளிக்ககூடாது. மீறி இடமளிக்கும் பட்சத்தில் அது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளையே தோற்றுவிக்கும். எனவே சர்வதேசத்தின் நாட்டிற்கு எதிரான முன்னெடுப்புக்களை அடியோடு இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறினார். ___

No comments:

Post a Comment