மனுக்குல தர்மம் வெட்கித்தலைகுனியும் வகையிலான கொடூர யுத்தம் மூலம் தமிழ் மக்கள் பாரிய இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
எனினும் கடந்தகால போராட்டத்தின் விளைவாக தமிழ் மக்களது அரசியல் உரிமைப் பிரச்சினையின் நியாயத்தை சர்வதேச சமூகம் மத்தியில் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பேசுபொருளாக ஆக்கியுள்ளது. இத்தகைய சூழலில் இலங்கைத்தீவை மையப்படுத்தி சர்வதேச சமூகத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் சென்று நியாயத்தை நிலை நாட்டுவதற்குரிய வாய்ப்பான சூழலைத் தோற்றுவித்துள்ளது.
அவ்வகையில் எவ்வித சோர்வும் அல்லாமல் உண்மையான தேசிய உணர்வோடு நீங்கள் இன்று ஆரம்பித்திருக்கும் நீதிக்கான நீண்ட நடைபயணம் வெற்றிபெற நாம் வாழ்த்துகிறோம் .
நீங்கள் செல்லும் ஒவ்வொரு பாதையிலும் பல்லின மக்கள் எமது இனத்தின் வலியை உணர்வார்கள் என்பது நிச்சயம் .அத்தோடு அங்கு வாழும் எம் இன உறவுகள் உங்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர் .தொலைதூரம் பரந்து வாழும் எம் உறவுகள் கணணிக்கு முன்னிருத்து இணையத்தில் உங்கள் செய்தி அறிந்தாலும் இதயத்தை உங்களுடன் இணைப்பார்கள்.
நடைபயணத்தின் இறுதி நாளான 05 .03 .2012 அன்று அனைத்து ஐரோப்பிய ஈழத்தமிழர்களும் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அங்கு சென்ற ஆண்டு பொங்கு தமிழ் நிகழ்வில் இவ்விடையமாக உறுதிமொழி அளித்தது போல் ஒன்றிணைந்து உரிமை குரல் கொடுக்க வருவார்கள் .
வரலாற்றில் எம்மை அழிவுற்ற தோல்வியடைந்த மக்கள் எனப் பதிவு செய்யுமாறு விதிவகுக்க முனையும் சிங்கள இனவெறி அரசுக்கும் ஏனையவர்களுக்கும் , நாம் புதிய வரலாற்றை சிருஸ்டிக்கும் உணர்வும், உயிர்ப்பும் உள்ளவர்கள் என்பதை உணர்த்துவோம்.
உங்கள் நீதிக்கான நடைபயணத்தின் பாதைகள் தமிழீழத்தை வரையட்டும் என மீண்டும் வாழ்த்துக் கூறுகிறோம்.
நன்றி
ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி
www.vetd.info | info@vetd.info
No comments:
Post a Comment