Translate

Sunday, 5 February 2012

தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் போங்கள்! கூட்டமைப்புக்கு விமல் வீரவன்ச அறிவுரை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , தங்களுடைய கோரிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனிடம் பெற்றுக்கொள்ளட்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல் வீரவன்ச, கொழுப்பில் இருந்து வெளிவரும் 'த ஐலன்ட" (The island ) நாளேட்டுக்கு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழத்தின் இடைக்கால அரசின் பிரதமரான வி.உருத்திரகுமாரனிடம், ஈழப் பிரச்சனையைப் பற்றித் தங்களுக்கு வேண்டிய வகையில், தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
எல்லைகளை மட்டுப்படுத்தாத தமிழீழத்தை உருவாக்கும் முயற்சியில் வி.உருத்திரகுமாரன் ஈடுபட்டிருக்கிறார் என்றும் விமல் வீரனவன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment