Translate

Tuesday, 28 February 2012

சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு – ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள் முடிவு


சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பேரவை தீர்மானித்துள்ளது.

நேற்று பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பேரவையின் கூட்டதிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் சிறிலங்கா பற்றியதும் ஒன்றாகும்.
போர்க்காலச் சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரம் தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதை ஐரோப்பிய ஒன்றியம் ஊக்குவிக்கும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கு கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment