போர்க் குற்றச் செயல் தொடர்பில் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை கண்டு வெளிநாட்டு சக்திகளின் முன்னிலையில் மண்டியிடப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றச் சாட்டுக்களை சுமத்தி இலங்கையை பணயமாக வைத்து, வடக்கில் ஈழ இராச்சியத்தை உருவாக்க சில வெளிநாட்டு சக்திகளும், தமிழ் புலம்பெயர் மக்களும் முயற்சி செய்கின்றனர்.
நாட்டை பிளவு படுத்தி தனி இராச்சியத்தை அமைக்க புலிகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தச் சக்திகள் தொடர்கின்றன.
போர்க் குற்றச் செயல்களை காரணம் காட்டி வெளிநாட்டு கண்காணிப்பாளர்களைக் கொண்டு விசாரணை நடத்த முயற்சிக்கப்படுகிறது.
நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ளப்பட்ட சுதந்திரத்தை பறிக்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது.
மீண்டும் நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது.
மேற்குலக நாடுகளின் பிரிவினைவாத கோட்பாடுகளை முறியடிக்க சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment