ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ், மனித உரிமைப் பேரவையில் உரை நிகழ்த்துவதிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கடந்த வாரம் வெளியிட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் இலங்கையின் சார்பில் பிரதான உரையை நிகழத்துபவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் என தெரிவிக்கப்பட்டிருந்தது
. ஆனால் நேற்று (21) அது வெளியிட்டிருந்த சில மாற்றத்துடனான நிகழ்ச்சி நிரலில் ஜீ.எல். பீரிஸின் பெயருக்குப் பதிலாக இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அமைச்சர் மஹிந்த சமரசிங்க எதிர்வரும் 27 ஆம் திகதி மனித உரிமைப் பேரவையில் உரை நிகழ்த்தவுள்ளார்.
No comments:
Post a Comment