
மாகாணங்களுக்குப் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாவிடின் அதிகாரப் பகிர்வின் அர்த்தம் என்ன? அதன் நோக்கமே நிறைவேறாமல் போய் விடும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ் அதிகாரம் இன்றி சட்டங்களை நடைமுறைப் படுத்த முடியாத அதிகார மற்ற சபைகளாக மாகாண சபைகள் இருப்பது அதிகாரம் எதுவுமே வழங்கப்படாத செயற்பாட்டை விட மோசமான தாகும். பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வது தற்போதைய அரசியலமைப்பின் ஓர் அங்கம் என்பதாலும் கடந்த கால அரசியலமைப்பு மறு சீரமைப்பு யோசனைகளில் பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளமை யினாலும் அதனை அமுல்படுத்தாமல் இருக்கின்றமைக்கு நியாயமான காரணத்தைக் கூற முடியாது எனவும் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.................. read more
No comments:
Post a Comment