ஒருபக்கம் அமெரிக்காவிடம் பணிந்து பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் மஹிந்த இன்னொருபக்கம் சிங்கள மக்களை மேற்கிற்கு எதிராக தூண்டி தனது உள்ளூர் அரசியலை திடப்படுத்தியும் தனது ஆதரவு நாடுகளை குஷிப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிலஇலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை முன்வைப்பதற்கு திட்ட மிட்டுள்ளன. இந்தப் பிரேரணையைக் கண்டு இலங்கை ஒருபோதும் பயப்பிடவில்லை. மாறாக அதனை எப்படி எதிர்கொள்வது என்ற வியூகங்களை நாங்கள் வகுத்திருக்கிறோம். ஜெனிவாவில் அந்தப் பிரேரணைக்கு மிகச் சரியான பதிலை நாம் வழங்குவோம். இவ்வாறு மஹிந்த அரசு கூறியுள்ளது.
நல்லிக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப் போவதில்லை. ஆயினும் அறிக்கை தொடர்பில் சர்வதேசத்தினால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நாம் அங்கு பதிலளிப்போம். மேற்கு நாடுகள் சிலவும் அரச சார்பற்ற நிறுவனமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சனம் செய்து வருகின்றன. என்றும் கிலாகித்துள்ளது மஹிந்த அரசு
No comments:
Post a Comment