Translate

Sunday, 5 February 2012

டிஸ் கவரி தொலை காட்சியில் ஒரு நிகழ்சி!!!

பத்து தாய் மார்களை வரிசையாக நிற்க வைத்து கண்ணை கட்டி விட்டனர் .அவர்கள் பெற்ற குழந்தையை ஒவ்வொரு தாயின் அருகில் கொண்டு செல்கின்றனர் அத் தாய் குழந்தையின் உச்சிதனை முகர்ந்து பார்த்து கண்டு பிடிக்க வேண்டும் .


பத்து தாய்மார்களும் மிகச் சரியாக கண்டுபிடித்தனர் .அதையே பத்து தந்தையர்களை நிற்க வைத்து கண்டு பிடிக்க சொன்னால் ஒருவர் கூட தாம் பெற்ற குழந்தையை கண்டுபிடிக்கவில்லை .

தாயை போல நம் தேசியத் தலைவர், தம் உயிரினும் மேலாக நம் மக்கள் மீது வைத்துள்ள அன்பு, அவர் செய்த ஈகை, அந்த தாயின் அன்பை விட மேலானது.

அவர் வழியில் நமது தமிழின பற்றும், மொழி பற்றும்,அவரது ஒழுக்கமும்,உள்வாங்கி செயல் படக் கூடியவர்கள் மட்டுமே அவரை உறவு முறையில் அழைக்கும் தகுதி பெற்றவர்கள். அதையும் அவரவர்கள் செயல் பாடுகளை பார்த்து மக்கள் அழைக்க வேண்டும் .

தலைவர்கள் தானை தானே நான் தலைவரின் தம்பி அன்று கூறி கொள்வது அல்ல . அது ஜெயா தன்னை அம்மா என்றும் ,ராமதாசு தன்னை அய்யா என்றும் ,திருமா தன்னை எழுச்சி தமிழர் என்றும் வை கோ தன்னை புரட்சி புயல் என்றும் அழைத்து கொள்வது போன்றே இதுவும் செயற்கையானது .

மேற்கண்ட பட்டங்களை மக்கள் கொடுத்திருந்தால் என் கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் .

No comments:

Post a Comment