களனி பிரதேசத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவந்த காணிக் கொள்ளையின் விபரங்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
நான்கு வருடங்களுக்கு முன்னர் களனி பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள 160 பேர்ச்சஸ் காணியின் உரிமையாளர் காணியைப் பராமரிக்க திரும்பிய வேளையில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
இந்த உரிமையாளர் இதுவரை வெளிநாட்டில் தங்கியிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு அமைச்சின் செலவில் குறித்த நபர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
இந்தக் காணிக்கு போலி உறுதி ஆவணங்களைத் தயாரித்து லால் பீரிஸ் என்பவரினால் வேறொருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மேர்வின் சில்வாவின் ஆலோசனைக்கமையவே லால் பீரிஸ் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் காணியின் தற்போதைய பெறுமதி 10 கோடி ரூபாவாகும். களனி பிரதேச சபைத் தலைவருக்கும் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் இடையே முறுகல் ஏற்படுவதற்கு இந்தக் காணி விவகாரமே அடிப்படையாக அமைந்தது எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன
No comments:
Post a Comment