Translate

Thursday, 29 March 2012

புனர்வாழ்வு வழங்கப்பட்ட 385 முன்னாள் போராளிகள் இன்று விடுதலை _


  புனர்வாழ்வு வழங்கப்பட்ட 385 முன்னாள் போராளிகள் இன்று (29.03.2012) மாலை 5.00 மணிக்குக் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, விடுதலை செய்யப்பட உள்ளனர். 


இந்நிகழ்வில் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகளான இளைஞர் மற்றும் யுவதிகள் வழங்கும் இசை, நடனகலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள். இதற்கான அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கான கடன் வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இத்திட்டத்தினூடாக உயர் கடன் தொகையாக இரண்டரை இலட்சம் ரூபாவைக் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அரசைச் சார்ந்த முக்கியஸ்தர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர் எனப் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment