இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவந்த அமெரிக்காவின் பொருட்களை தடை செய்ய வேண்டுமெனக் கூறும் அமைச்சர் விமல் வீரவன்ச, அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவின் பொருட்களை தடை செய்யுமாறு ஏன் கூறவில்லையெனக் கேள்வி எழுப்பிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவ்வாறு விமல் வீரவன்ச கூறியிருந்தால் கோவணத்துடன் தான் அவர் இருக்க வேண்டியேற்படுமென்று கூறினார்.
கலாபூசணம் இரா.அரசகேசரியின் களுவாஞ்சிக்குடி கலைக்களஞ்சியம் முதலாம் பாகமும் காவடிச்சிந்தும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
களுவாஞ்சிக்குடி கிராமத் தலைவரும் முகாமை ஆலயம் மற்றும் ஸ்ரீ வீரபத்திரர் ஆலய தலைவருமான அ.கந்தவேல் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய அரியநேத்திரன் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது;தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை நோக்கி இன்று கல்வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அந்த கல்லை வீசுபவர்கள் ஏன் வீசுகின்றார்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் 62 வருட அரசியல் போராட்டத்தில் ஆயுதப் போராட்டம் 31 வருடங்களும் அகிம்சை போராட்டம் 30 வருடங்களும் இடம்பெற்று இன்று எதுவுமே அற்ற நிலையில் இருந்தாலும் கூட 2010 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான ஒரு பலம் இருக்க வேண்டும். தமிழர்களை தமிழர்கள்தான் தீர்மானிக்கின்ற சக்தியாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் 14 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிவைத்தீர்கள்.
தற்போது எங்களைப் பிரிப்பதற்காக பல சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை என்ன சக்திகள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சர்வதேச ரீதியாகச் சென்றிருக்கின்ற எங்கள் விடயத்தை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய கடப்பாடு எங்களுக்க இருக்கின்றது. ஜெனீவா மகாநாட்டிற்கு நாம் செல்லாவிட்டாலும் கூட அங்கேயிருக்கின்ற 47 நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கேயிருக்கின்ற பிரச்சினையை மிகத் தெளிவாக விளங்கக் கூடிய விதத்தில் எழுத்து மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுதியனுப்பியிருந்தது.
இந்தச் செய்திக்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு சென்று இராஜதந்திரிகளுடன் பேசி இங்கிருக்கின்ற விடயங்களை அவர்களுக்கு முன்னிலைப்படுத்தியிருந்தார்கள். அதன் பின்னர் தான் அமெரிக்கா ஜெனீவா தீர்மானத்தைக் கொண்டுவந்தது. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் என்ன என்பதை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றிருக்கின்றது என்பதற்கு ஐ.நா. சபையில் சாட்சி சொல்லப்பட்டிருக்கின்றது. ஐ.நா. சபையில் ஒரு அறிக்கை வந்திருக்கின்றது. ஆனால், அந்த அறிக்கையை அமெரிக்கா கொண்டு செல்லவில்லை. போர்க்குற்றத்தை விசாரியுங்கள் என்று அமெரிக்கா கொண்டு செல்லவில்லை. இதன் பின்னர் இலங்கை அரசினால் நல்லிணக்க ஆணைக்குழு என்ற அறிக்கை வெளியிடப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நீங்கள் செய்யுங்கள் என்று தான் அமெரிக்கா பிரேரணையை கொண்டுவந்திருக்கின்றது.
24 நாடுகள் அந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றன. இதற்கு வாக்களிக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாகக் கூறிக்கொண்டிருந்தது. அதற்கான ஆய்வுகளையும் ஆதாரங்களையும் நாங்கள் கொடுத்திருந்தோம். அது இப்போது நிறைவேறியிருக்கின்றது.
தமிழ்த் தேசியத்திற்காக வாக்களித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத்திற்கு அனுப்பியவர்களுக்கு எங்களை விமர்சனம் செய்வதற்கு உரிமையிருக்கின்றது. அதில் எந்த விதத்திலும் நாங்கள் பின்நிற்கவில்லை. எங்களுக்கு வாக்களித்தவர்கள் எங்களை விமர்சனம் செய்யத்தான் வேண்டும். ஆனால், அரசாங்கத்திற்கு வாக்களித்துவிட்டு கடந்த தேர்தலிலே வெற்றிலைக்குப் பின்னால் நின்று விட்டு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்துவிட்டது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதையிருக்கின்றது.
கொழும்பிலிருந்து சரவணமுத்து பரஞ்சோதி உட்பட மூன்று ஊடகவியலாளர்கள் ஜெனீவாவுக்கு சென்றிருந்தார்கள். அவர்கள் நேரடியாக இங்கு நடந்த கொடுமையை சொன்னார்கள். இங்கிருக்கின்ற அமைச்சர் மேர்வின் சில்வா அவர்கள் வந்தால் காலை உடைப்பேன் என்று சொல்கின்றார்.
இதிலிருந்து இனவாதத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்காவின் பொருட்களை தட செய்ய வேண்டும் என்று விமல் வீரவன்ச சொல்கின்றார். ஆனால், இந்தியா அங்கு இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தது. அவர் அதை இந்தியாவுக்கு சொல்லவில்லை. இந்தியாவின் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லியிருந்தால் கோவணத்துடன்தான் வீரவன்ஸ இங்கு இருந்திருப்பார்.
இவ்வாறான இனவாதத்திற்கு மத்தியில் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணம் செய்துகொண்டிருக்கின்றது. இந்தப் பயணத்தை பொறுக்க முடியாத அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை குழப்புவதற்கு பல கோடி ரூபாக்களை அள்ளி விதைத்திருக்கின்றது. இது உண்மையாகும். அதற்காக பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நீங்கள் அறிவீர்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த களுவாஞ்சிக்குடி மண் சோரம் போகாத மண்ணாகும். 2010 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் நான் இங்கேதான் அடிபட்டேன். அந்த அடி தான் எனக்குக் கிடைத்த வாக்குகளாகும். இந்த நூல வெளியீடு சிறப்பாகஅமைந்திருந்தது. கடந்த கால வரலாற்றையும் நிகழ்கால வரலாற்றையும் அறியாதவனுக்கு எதிர்காலமே கிடையாது என்று ஒரு அறிஞர் கூறியிருக்கின்றார்.
நாங்கள் கடந்த காலத்தை பார்க்க வேண்டும். இரண்டரை இலட்சம் மக்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். என்ன இழந்தார்கள் எத்தனை பேர் அங்கவீனர்களாக இருக்கின்றார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
கல்லடியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த தேர்தலுக்கு வரும்போது விளக்குமாற்றால் அடியுங்கள் என்று கூறுகின்றார். அம்பாந்தோட்டையில் பிறந்தவர் கல்லடியில் வந்து சொல்கின்றார். இது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்ற விமர்சனம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரல்ல. விளக்குமாறு கட்டுகின்ற அமைச்சராக மாறிவிட்டார். இதுதான் உண்மையாகும். நாங்கள் எவருக்கும் பயந்து அரசியல் செய்யவில்லை. நாங்கள் 2004 ஆம் ஆண்டு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்தவர்கள். ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், யாழ்.மாவட்டத்தில் கிட்ணன் சிவனேசன் போன்றோரை இழந்திருக்கின்றோம். இழப்புகளை வைத்து நாங்கள் பாராளுமன்றம் செல்லவில்லை. மக்கள் சாகலாம் கொள்கை சாகாது.

No comments:
Post a Comment