Translate

Thursday 29 March 2012

தலையீடுகளைத் தவிர்த்தால் பரிந்துரைகளை செயற்படுத்தலாம்; நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு


தலையீடுகளைத் தவிர்த்தால் பரிந்துரைகளை செயற்படுத்தலாம்; நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
news
 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும். தேவையற்ற தலையீடுகளைத் தவிர்த்தால் அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்காது என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற பிரபுக்கள் சபை உறுப்பினரான நெஸ்பி பிரபு நேற்று புதன்கிழமை முற்பகல் அமைச்சர் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
 
இந்த உரையாடலின் போது லண்டன் மாநகர உறுப்பினரான அவரது மனைவி திருமதி நெஸ்பியும் கலந்து கொண்டார்.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறை பற்றி நெஸ்பி பிரபு கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்\ர் ஹக்கீம், அதில் நல்ல பல அம்சங்கள் அடங்கியிருப்பதாகவும் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் எதுவும் இருக்கமாட்டாதெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
 
வடக்கிலிருந்து அகதிகளாக வெளியேறிய முஸ்லிம்களில் கணிசமான தொகையினர் யுத்தம் முடிவடைந்த சூழ்நிலையில் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று மீள்குடியேறி வருகின்றனர், அவர்களுக்கான போதிய உட்கட்டமைப்பு வ\திகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது.
 
தடுப்புக் காவலில் இருக்கும் பொழுது சித்திரவதைக்குள்ளாகும் நபர்களின் விடயத்தில் சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டு குற்றமிழைப்போருக்காக வாதாடுவதை தவிர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. என்றும் அமைச்சர் ஹக்கீம் அங்கு தெரிவித்தார். 

No comments:

Post a Comment