மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 12 March 2012
இலங்கை செல்லவேண்டாம்: பிரித்தானிய கிரிகெட் டீம்மை மறித்த சனல் 4 !
நேற்றைய தினம்(10.03.2010) இலங்கைக்கு செல்லவிருந்த பிரித்தானிய கிரிகெட் அணியின் பயிற்ச்சியாளரை சனல் 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டு நிருபர் மறித்து DVD ஒன்றைக் கையளித்துள்ளார். அது கொலைக்களங்கள் DVD ஆகும். நீங்கள் நிச்சயம் இலங்கை செல்லவேண்டுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் பிரித்தானிய கிரிகெட் அணியின் பயிற்ச்சியாளர் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு அவரால் எப்பதிலையும் கூற முடியவில்லை. தொடர்ந்து பேசிய சனல் 4ன் நிருபர் திரு பென் அவர்கள், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புள்ளிவிபரங்களுடன் கூடிய தகவலை எடுத்துரைத்தார்.
இலங்கைக்கு விமானம் மூலம் செல்ல சுமார் 12 மணி நேரம் பிடிக்கும். மற்றும் பிரித்தானிய கிரிகெட் அணியின் பயிற்ச்சியாளர் முதலாந்தர ஆசன வகுப்பில் செல்லவுள்ள நிலையில், திரு பென் அவர்கள் கொடுத்த DVD ஐ அவர் விமானத்திலேயே பார்க்க முடியும். சனல் 4 தொலைக்காட்சியின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கை பிரித்தானிய கிரிகெட் வீரர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இலங்கை செல்லும் வழியில் விமானத்தில் கொலைக்களங்கள் காணொளியை இவர்கள் பார்த்துவிட்டு பின்னர் இலங்கையில் கிரிகெட் விளையாடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment