இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் காணொளி, இலங்கை அரசாங்கமும் இராணுவத் தலைமைப் பீடமும் மேற்கொண்ட போர்க்குற்றங்களை மீண்டும் ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளது.
இப் போர்க்குற்றச்சாட்டுகளுக்க பொறுப்புக் கூறவேண்டிய இராணு உயர் பீடத்திடம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் சனல் 4 வலியுறுத்தியுள்ளது. இவ் ஆவணப்படம் நேற்று அதிகாலை 5.55 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிராபாகரனின் மகன் பாலச்சந்திரனை இராணுவம் சுட்டுக் கொன்றதற்கான ஆதாரங்களை சனல் 4 விரிவாக விளக்கியுள்ளது.
ஆனாலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஏற்கனவே வெளியான காணொளி பதிவுகளையே வெளியிட்டது. மேலும், பாதுகாப்பான பகுதிகள் என அறிவிக்கப்பட்ட-பொது மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளிலும் வைத்தியசாலைகள் மீதும் பாரிய கனரக ஆயுதங்கள் மூலம் குண்டுகளை வீசியமை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான மருந்து மற்றும் உணவுப்பொருட்களை வழங்காது தடுத்தமை, வன்னியில் பெண்கள் மீது மேற்கொள்ள ப்பட்ட வண்முறைகள், மக்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது உட்பட பல்வேறு போர்க்குற்றங்களையும் சனல் 4 காணொளி அம்பளப்படுத்தியுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி இதற்கு முன்னர் வெளியிட்ட போர்க்குற்ற காணொளிகளை பொய் எனக் கூறிய இலங்கை அரசு தற்போது வெளியாகியுள்ள புதிய ஆவணப்படத்தையும் நிராகரித்துள்ளது. எனினும் சனல் 4 தொலைக் காட்சியை நேரடிக்கருத்துக்களை வழங்கிய அனைத் துலக மனித உரிமை அமைப்புகளும் பிரதிநிதிகளும், பிரபல குற்றவியல் தடய நிபுணரும் இப் போர்க்குற்றங்கள் குறித்த பின்னணிகளையும் இதை மறைப்பதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் விளக்கினார். சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் கொலைக்களங்கள்-தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் காணொளியின் ஊடகா போர்க்குற்றச்சாட்டுக்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த ஆவணப்படத்தின் இறுதியில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
ஆனால் இப் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி அம்மக்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்வியை ஜோன் ஸ்னோ சர்வதேச சமூகத்தின் மீது முன்வைத்துள்ளார்.
No comments:
Post a Comment