Translate

Monday 26 March 2012

ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: தயான் ஜயதிலக


ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: தயான் ஜயதிலக
ஜெனிவாவில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு, 15 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளதன் மூலம் அது உறுதிப்படுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரேரணையால் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாதெனவும், இலங்கைக்கு சார்பானது எனவும் பலரும் தெரிவிப்பதில் எதுவித அடிப்படையும் இல்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், ஈக்குவடோர் போன்ற நாடுகள் இலங்கை போன்றதொரு நாட்டிற்கும், மனித உரிமைகள் பேரவைக்கும், சர்வதேசத்திற்கும் இதனால் பிரச்சினைகள் ஏற்படக் கூடாதென்ற காரணத்தினாலேயே இந்தப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
சர்வதேசத்தினால் பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை குறைப்பதற்கு அரசாங்கம், மியன்மாரை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னர் மியன்மார் மீது சர்வதேச நாடுகளால் பாரியளவிலான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், தற்போது அவ்வாறானதொரு நிலைமை காணப்படவில்லை.
உள்நாட்டு ரீதியில் முன்னெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கைகளே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் அழுத்தங்கள் பிரயோகித்த சர்வதேசம், மியன்மாருக்கு ஆதரவாக செயற்பட ஆரம்பித்தது. இதனையே இலங்கை பின்பற்ற வேண்டும் எனவும் பிரான்சுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment