Translate

Wednesday, 21 March 2012

தமிழர்களுடன் இணக்கப்பாட்டிற்கு செல்லுமாறு கனடிய அரசு அழுத்தம்.


போருக்கு பின்னர், தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தினை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கனடிய அரச மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது.
ஜெனிவாவில் சிறிலங்கா தொடர்பான விவகாரம் முக்கிய கட்டத்தினை அடைந்திருக்கும் இந்த வேளையில், கனடிய அரசின் மூன்று பேர் கொண்ட குழுவொன்று கொழும்ப செல்கிறது.
வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயட்டின் (John Baird ) பணிப்பின் பேரில் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவ்கானிஸ்தானிற்கான தூதுவருமான கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் (Chris Alexander ), பாராளுமன்ற உறுப்பினர் ரிக் டிகஸ்ரா(Rick Dykstra), செனட்டர் வேன் வைட் (Vern White) ஆகியோர் கொழும்ப செல்கின்றனர்.

மூன்று நாட்கள் தங்கியிருக்கும் இவர்கள் அரச தரப்பினர், உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது,
கனடிய பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் உட்பட யுத்தப் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கும் பயணம் செய்யவிருப்பதாக ஒட்டாவச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணையை nஐனிவாவில் அமெரிக்காவுடன் இணைந்து கனடாவும் சமர்பித்துள்ள நிலையில், அதற்கான ஆதரவு திரட்டும் பணியையும் கனடா முன்னின்று செய்து வரும் நிலையில், கனடிய அரசின் பிரதிகள் குழுவினத சிறிலங்கா பயணம் முக்கிய கவனத்தினை பெறுகின்றது.
அடுத்த ஆண்டு சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கப்போவதாக கனடியப் பிரதமர் ஸ்ரீபன் ஹார்ப்பர் (Stephen Harper) ஏற்கனவே கூறியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
கடந்த காலங்களில் சிறிலங்கா செல்ல முயன்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றிக் பிறவுன் (Patrick Brown), போல் கலன்ரா (Paul Calandra) ஆகியோருக்கு சிறிலங்கா விசா அனுமதியை மறுத்ததுடன், லிபரல் கட்சித் தலைவர் போப் ரேயை (Bob Rae) கொழும்பு விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment