இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது எமது நோக்கமல்ல, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதே எமது அபிலாஷை என்று மத்திய, தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் பிரதி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் ஈ.டி.வியுடனான ‘ஸ்கைப்’ உரையாடல் ஒன்றின்போது தெரிவித்திருக்கிறார்.
இதன்போது, காஷ்மீர், பர்மா போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தும் இலங்கைமீது மட்டும் குறிப்பாக கவனம் செலுத்துவதன் காரணம் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது,
“இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுப் போர் முடிவுக்கு வந்து 3 வருடங்கள் கடந்த பின்னரும் அந்நாட்டு அரசாங்கம், எதிர்பார்த்த வகையில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வையும் முன்னெடுக்கவில்லை. தீர்வு காண்பது குறித்து அசமந்தப் போக்கையே அந்நாடு கடைபிடித்தது. இதுவே இலங்கை மீதான அழுத்தம் ஏற்படக் காரணம்..” என்றார் ரொபர்ட்.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதும் அதனை ஐநாவின் கண்காணிப்பில் மேற்கொள்வதும் அத்தியாவசியமாகக் கருதப்படுவதாக ரொபர்ட் ஓ பிளேக் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பான காணொளி இத்துடன் இணைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment